யார் காக்கை வன்னியன்? மருத்துவர் ராமதாசுக்கு விருதாம்பிகை கேள்வி

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கேட்டு வன்னியர் மக்களால் போராட்டம் நடத்தியது 1987 செப்டம்பர் 17 முதல் ஒரு வார காலத்திற்கு நடத்தப்பட்டது. அப்போதைய ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர் அரசு 21 வன்னியர் தியாகிகளை சுட்டுக் கொன்றது. 4 வன்னியர் தியாகிகளை அடித்தே கொன்றது. மேலும் நம் போராட்டத்தை எம்.ஜி.ஆர் கொச்சைப் படுத்தினர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் 1989 இல் ஆட்சிக்கு வந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் எந்த வித போராட்டமும் நாம் செய்யாத போது வன்னியர்களின் நலனில் அக்கறை கொண்டு வன்னியர் தலைவர்களை அழைத்து 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை உருவாக்கினார். இன்றுவரை இந்த 20 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது எந்த சட்டப் பிரச்சினை ஏற்படவில்லை. ஆனால் நீங்கள் திரு. கலைஞர் அவர்கள் அழுகிய மாம்பழத்தை கொடுத்துவிட்டார் என்று பல முறை பேசி உள்ளீர்கள். திராவிட முன்னேற்ற கழகம் வன்னியர்களுக்கு எதிரான கட்சி என்று கூறியுள்ளீர்கள். மற்ற கட்சி தலைவர்களுடன் நட்பில் இருக்கும் நம் வன்னியர் தலைவர்களை காக்கை வன்னியன் என்று அழைத்தீர்கள். அது மட்டுமல்லாமல் நம் பாட்டாளி சொந்தங்களை வைத்து சமூக வலைதளங்கள் மற்றும் பிற இடங்களில் அவர்களைப் பற்றி தவறான வார்த்தையில் திட்டவும் செய்தீர்கள். 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தற்போதைய முதல்வர் மாண்புமிகு திரு .மு. க.ஸ்டாலின் அவர்களை வன்னியர் துரோகி என்று பல இடங்களில் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் வேட்பாளர் இல்லாத போதும் அவரை தனிப்பட்ட முறையில் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்கள் பேசி உள்ளார். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் 2019 ஆம் ஆண்டு திரு.மு. க. ஸ்டாலின் அவர்கள் தான் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி உள் இட ஒதுக்கீடு வழங்குவேன் என்று கூறினார். அதுவரை ஐயா நீங்கள் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு என்ற ஒரே கோஷத்தை மட்டும் வைத்து இருந்தீர்கள். நீங்கள் அப்பொழுது திரு. மு. க.ஸ்டாலின் அவர்கள் எப்படி உள் இட ஒதுக்கீடு வழங்குவார் என்று அவரை ஏளனம் செய்தீர்கள். பிறகு திரு.மு. க. ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்து விடுவார் என்று பயந்து 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ஒரு நாடகத்தை அரங்கேற்றி உங்களுடைய கொள்கை தனி இட ஒதுக்கீடு என்பதை மாற்றி உள் இட ஒதுக்கீடு என்று மாற்றம் செய்து ஐயா திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக வந்துவிட்டால் கொடுத்துவிடுவார் என்பதற்காக அரசியல் நாடகம் செய்தீர்கள்.. உங்களுடைய தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காகவும் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் அவருடைய அரசியல் லாபத்திற்காகவும் வன்னியர்களுக்கான 10.5 தனி உள் இட ஒதுக்கீடு வழங்கினார். அப்போதே நாங்கள் கூறினோம் நீங்கள் தேர்தலுக்காக தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காக எந்த ஒரு சரியான புள்ளிவிவரங்கள் இல்லாமல் இந்த இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளீர்கள் என்று. ஆனால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க .ஸ்டாலின் அவர்கள் நீங்கள் கூறிய போல் இல்லாமல் தந்தையின் வழியில் வன்னியர் மக்கள் மீது அன்பு கொண்டு தமிழக முதல்வராக பதவி ஏற்றவுடன் அவரது கூறியதுபோல் இந்த மசோதாவிற்கு அரசு ஆணை வழங்கினார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்த போதும் உச்சநீதிமன்றத்தில் சிறப்பான வழக்கறிஞர் வைத்து ஐயா திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் சிறப்பாக செயல்பட்டார். மேலும் ஐயா.திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வன்னியர் மக்களின் மீது அன்பு கொண்டு எந்த ஒரு வன்னியர் தலைவர்களும் கோரிக்கை வைக்காத போது வன்னியர் உரிமைப் போரில் உயிர்நீத்த குடும்பங்களுக்கு அரசு வேலை மற்றும் அவர்களுக்கு மணிமண்டபம் அதுமட்டுமல்லாமல் வன்னியர் உரிமைப் போரை சமூக நீதி போர் என்று அங்கீகரித்தார். தற்போது உச்சநீதிமன்றம் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து இருந்தாலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க.ஸ்டாலின் அவர்கள் சரியான சட்ட நடவடிக்கைகளை எடுத்து மீண்டும் நமக்கு வன்னியர் உள் இட ஒதுக்கீடு பெற்றுத் தருவார்கள். இவ்வாறு இருக்கும் இருக்கும்பொழுது 20 சதவீதம் கொடுத்தது,வன்னியர் உரிமைப் போரில் உயிர்நீத்த 25 குடும்பங்களுக்கு 3 லட்சம் பணமும் ஓய்வூதியமும் வழங்கியது ஐயா கலைஞர் அவர்கள் வன்னியர்களுக்கான10.5 சதவீதத்திற்கு அரசு ஆணை வழங்கியதும் வன்னியர் உரிமைப் போரில் உயிர்நீத்த 25 குடும்பங்களுக்கு அரசு வேலை அவர்களுக்கு மணிமண்டபம் மேலும் வன்னியர் உரிமைப் போரை சமூகநீதி போர் என்று அங்கீகரித்தது திரு. மு. க.ஸ்டாலின் அவர்கள் தற்பொழுதும் நமக்கான உரிமையை மீட்டு கொடுக்க முயல்பவர் திரு. மு. க.ஸ்டாலின் அவர்கள். ஐயா இதில் நீங்கள் செய்தது என்ன மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் திரு. கலைஞர் அவர்களையும் தற்போதைய முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களையும் அவதூறாகப் பேசியது மட்டுமே. அதுமட்டுமல்லாமல் திராவிட முன்னேற்றக் கழக தலைவர்களுடன் நட்புடன் இருந்த நம் சமூக தலைவர்களை காக்கை வன்னியன் என்று கூறியதே. ஆனால் நீங்கள் இதுவரை ஐயா திரு. மு. க. ஸ்டாலின் அவர்களை வன்னியர் துரோகி என்று கூறி விட்டு தற்போது புகழ்ந்து பேசுகிறீர்கள். தற்போது உங்கள் நிலை வன்னியர் இடம் பலமிழந்த திரு.எடப்பாடி கூட தங்களை எள்ளி நகையாடும் நிலைக்கு ஆளாகி விட்டீர்கள்.

ஐயா நான் உங்களிடம் கேட்கிறேன் இப்பொழுது யார் காக்கை வன்னியன்?

குரு. விருதாம்பிகை.
காடுவெட்டி குருவின் மகள்.
(மறைந்த வன்னியர் சங்க தலைவர்)