“ஆரியன்” திரைப்படம் அக்.31ல் வெளியீடு

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா,  ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர்  பிரவீன் கே.இயக்கத்தில்,  விஷ்ணு விஷால்  நடிப்பில், இரவில் துப்பறியும்  திகில் படமாக  உருவாகியுள்ள ஆர்யன் படத்தின் முன்னோட்டன் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 31-ம் தேதி  தமிழ் மற்றும்  தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது. ஒரு கொலை விசாரணையின் அறிமுகத்தையும் விஷ்ணு விஷால் கதாப்பாத்திரத்தையும் அறிமுகப்படுத்தும் இந்த முன்னோட்டம்,  ஆர்யன் எனும் காவலதிகாரியின் இருன்மையான ஒரு உலகிற்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. இதுவரை திரையில் நாம் பார்த்திராத காவலதிகாரியாக முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் விஷ்ணு விஷால் கவனம் ஈர்க்கிறார். இவருடன் இயக்குநர் செல்வராகவன்  மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி முக்கிய பாத்திரத்தில் நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து  நடித்துள்ளனர்.******

34 மாத இடைவெளிக்குப் பிறகு விஷ்ணு விஷால் தனி ஹீரோவாக கலக்கியிருக்கும் மிரட்டலான இந்த டீசர் திரை ஆர்வலர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. நடிகர் விஷ்ணு விஷால், ராட்சசன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்.  புதுமையான திரைக்கதையில் பரபரப்பான ஆக்சன் இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக  இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர்  பிரவீன் K.   நடிகர் விஷ்ணு விஷால் நடித்த “எஃப்.ஐ.ஆர்” படத்தை இயக்கிய மனு ஆனந்த், இந்த படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான  இன்வெஸ்டிகேடிவ் ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள், தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது. அக்டோபர் 31 ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

நடிகர்கள்  விஷ்ணு  விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி மற்றும் பலர் இயக்கம் – பிரவீன் K  தயாரிப்பு – விஷ்ணு விஷால் (விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்)  தொழில்நுட்ப குழு விபரம்  ஒளிப்பதிவு – ஹரீஷ் கண்ணன் இசை – ஜிப்ரான் எடிட்டிங் – ஷான் லோகேஷ் ஸ்டண்ட் – ஸ்டண்ட் சில்வா, PC ஸ்டண்ட்ஸ் பிரபு கூடுதல் திரைக்கதை – மனு ஆனந்த் புரொடக்‌ஷன் டிசைன் – S. ஜெயச்சந்திரன் உடை அலங்காரம் – வினோத் சுந்தர், வர்ஷினி சங்கர் சவுண்ட் – சச்சின் சுதாகரன், ஹரிஹரன் (SYNC CINEMA) ஆடியோ கிராபி – தபஸ் நாயக் DI – பிரிட்ஜ் போஸ்ட்‌வர்க்ஸ் VFX – ஹோகஸ் போகஸ் டப்பிங் – சீட் ஸ்டுடியோஸ் பப்ளிசிட்டி – பிரதூல் NT PRO – சதீஷ் (AIM), வம்சி சேகர் மார்க்கெட்டிங் & புரமோஷன்ஸ் – சித்தார்த் ஸ்ரீநிவாஸ் போஸ்ட் புரடக்சன்ஸ் சூப்பரவைஸர் – குணசேகர் ( போஸ்ட் ஆபிஸ் )  எக்சிக்யூட்டிவ் புரொடூசர் – சீதாராம் கிரியேட்டிவ் புரொடூசர் – ஷ்ரவந்தி சைநாத் தயாரிப்பாளர்கள்– சுப்ரா, ஆர்யன் ரமேஷ், விஷ்ணு விஷால்.