“சரண்டர்” திரைப்பட விமர்சனம்

வி.ஆர்.வி.குமார் தயாரிப்பில் கெளதமன் கணபதி இயக்கத்தில் தர்ஷன், லால், சுஜித், முனிஷ்காந்த், பாடினி குமார், அருள், ரம்யா ராமகிருஷ்ணன், சுந்தரேஸ்வரன், கெளசிக் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சரண்டர்”. உள்ளூர் தேர்தல் நேரத்தில் மன்சூர் அலிகான் தனது கைத்துப்பாக்கியை தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி காவல் நிலைய்த்தில் ஒப்படைக்கிறார். அதை இன்னும் சில தினங்களில் பணி ஓய்வு பெறவிருக்கும் தலைமைக் காவலர் லால் பெற்றுக் கொள்கிறார். பிறகு அந்த துப்பாக்கி காணாமல் போய்விடுகிறது. களவுபோன அந்த துப்பாக்கியை கண்டுபிடிக்கும் பொறுப்பை பயிற்சி உதவி ஆய்வாளரான தர்ஷனிடம் ஒப்படைக்கப்படுகிறது. இன்னொருபக்கம் தேர்தல் கையூட்டுப்பணமாக கொடுக்கப்படவிருக்கும் ரூ.10 கோடியை, காவல்த்துறை ஆய்வாளர் மூலம் ஒரு அரசியல்வாதிக்கு கொடுத்தனுப்புகிறார் தாதா சுஜீத். பணத்தை எடுத்துக் கொண்டு சென்ற வாகனமும் விபத்துக்குள்ளாகி அதிலிருந்த ரூ10 கோடி பணமும் காணாமல் போய்விடுகிறது. காணாமல் போன துப்பாக்கியும் பணமும் மீட்கப்பட்டதா? என்பதுதான் இப்படத்தின் கதை. படம்  இன்றைய அரசியலை அலசுகிறது. நேர்மையான காவலர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தாதாக்களுக்கும் இடையே நடக்கும் இன்றைய சூழ்நிலையை திரையில் பார்க்கமுடிகிறது. தர்ஷனுக்க் முதல் பாதிப்படத்தில் தொய்வு இருந்தாலும் இரண்டாம்பாதி படத்தில்தான் கலைகட்டுகிறார். சுஜீத் உள்பட அனைத்ஹு நடிகளும் தங்களது இயல்பான நடிப்ப வெளிபடுத்தி படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கு பக்கபலமாக இருக்கிறார்கள். லாலின் நடிப்பு கைத்தட்ட வைக்கிறது. மெய்யேந்திரன் ஒளிப்பதிவும், விகாஸ் பாடிஷா இசையும் படத்தின் தன்மைக்குப் பொருத்தமாக இருக்கின்றன படத்தைத் தொய்வின்றி இயக்கியிருக்கும் கௌதமன் கணபதியைப் பாராட்டலாம்.