ரசிகர்களை கவர்ந்த ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானி

வார் 2 திரைப்படத்தின் முதல் பாடலாக “ஆவன் ஜாவன்” பாடலை யஷ் ராஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளனர். இது ஒரு மெல்லிசை தாளமிக்க காதல் பாடல். இதில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானி என இருவரும் இதுவரை காணாத அளவிற்கு புத்துணர்ச்சியான தோற்றத்துடன் தோன்றுகிறார்கள்.  இசையமைப்பாளர் பிரிதம், பாடலாசிரியர் அமிதாப் பட்டாசார்யா, பாடகர் அரிஜித் சிங் ஆகியோர் மீண்டும் இந்தப் பாடலுக்காக ஒன்றிணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹ்ரித்திக் மற்றும் கியாராவின் மனதை கவரும் ஜோடி பொருத்தம், அவர்களின் இயல்பான தோற்றங்கள் என இவைகள் சமூக வலைதளங்களில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.******

யஷ் ராஜ் நிறுவனம்  நேற்று வெளியிட்ட செய்தியில், ” ‘ஆவன் ஜாவன்’ பாடல் கியாரா அத்வானிக்கும், அவரின்   ரசிகர்களுக்கும்  பிறந்த நாள் பரிசாக இருக்கும்” என்று தெரிவித்திருந்தனர்.அதைப்போலவே இப்பாடல் அமைந்துள்ளது. வார் 2 படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். யஷ் ராஜ் நிறுவனம் சார்பாக ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார் . இப்படம்  ஆகஸ்ட் 14ம் தேதியன்று, ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.