“லோகா அத்தியாயம் 1 சந்திரா” திரைப்பட விமர்சனம்

வேபாரர் பிலிம்ஸ் தயாரிப்பில் டோமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன், நாஸ்லன், சாண்டு சலிம்குமார், அருண் குரியன், சாண்டி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “லோகா அத்தியாம் 1 சந்திரா”. நாஸ்லன் மருத்துவ மாணவனாக தன் நண்பர்களுடன் தனது வீட்டில் குடியும் கும்மாளமாகவும் காலத்தை போக்கிக் கொண்டிருக்கிறார். அவர் வீட்டுக்கு எதிர் வீட்டுக்கு கல்யாணி பிரியதர்ஷன் தனி ஆளாக குடியேறுகிறார். கல்யாணியை பார்த்ததும் அவரை காதலிக்க தொடங்குகிறார் நாஸ்லன். அதே நேரத்தில் மனித உறுப்புகளுக்ளை விற்கும் கும்பல் ஒன்று, மனிதர்களை கடத்தி அவர்களை கொலை செய்து உறுப்புகளை எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள். அந்த கும்பலை கண்டுபிடிக்க போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது. இந்த நிலையில் ஆள்கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் கல்யாணி பிரியதர்ஷினியையும் கடத்தி விடுகிறார்கள். இதைப்பார்த்த நாஸ்லன்  கல்யாணியை காப்பாற்ற கடத்தல்காரர்களை பின்தொடர்ந்து செல்கிறார். ஆனால் கல்யாணி தனக்குள் இருக்கும் அபூர்வசக்தியால் கடத்தல்காரர்களை அடித்து துவைத்து அனைவரையும் கொலை செய்து விடுகிறார். இதைப்பார்த்த நாஸ்லன் நடுநடுங்கி கல்யாணியைப்பார்த்து பயப்படுகிறார். நீ யார் என்று கேட்கிறார். அதற்கு “பலநூறு ஆண்டுகளுக்குமுன் மனித குலத்தில் பிறந்த நான் ஒரு யட்சியாக மாறி பலநூறு ஆண்டுகளாக வாழ்கிறேன். தீயவர்களை கொலை செய்வதுதான் என் வேலை. எனக்கு சூரிய ஒளி பிடிக்காது. இரவில்தான் வெளியே வருவேன். மனித ரத்தத்தை குடித்து இளமையோடு இருக்கிறேன். இதை நீ வேறு யாரிடமும் சொல்லக்கூடாது. அப்படி சொன்னால் உன்னையும் கொன்றுவிடுவேன்” என்று கூறுகிறாள். இதைக்கேட்ட நாஸ்லன் மயக்கமுற்று கீழே விழுந்துவிடுகிறார். மனிதகுலத்தில் பிறந்த கல்யாணி பிரியதஷன் எதற்காக யட்சியாக மாறினாள்?. மயக்கமுற்ற நாஸ்லன் எழுந்து எப்படி நடந்து கொண்டார்? காவல்த்துறையினர் யட்சியை பிடித்தார்களா? காவல்த்துறை அதிகாரி சாண்டு என்ன ஆனார்?. கயாணிமீது நாஸ்லன் கொண்ட காதல் என்ன ஆனது? போன்ற கேள்விகளுக்கு வெள்ளித்திரையில் விறுவிறு காட்சிகளுடன் பதிலளிக்கிறார் இயக்குநர் டோமினிக் அருண். இளமை ததும்பும் உடற்கட்டில் இறுக்கமான முகத்துடன் அதிகம் பேசாமல் திரையரங்கை அதிரவைக்கும் கல்யாணி பிரியதர்ஷனின் நடிப்பு அபாரமாக உள்ளது. சண்டைக்காட்சிகளில் உடலை வில்லாக வளைக்கிறார். பயத்தில் நடுங்கும் நாஸ்லன் காதல் உணர்வில் கலங்குவது பார்வையாளர்களின் நெஞ்சில் ஈரம் கசிகிறது. உச்சக்கட்ச காட்சியில் யட்சினிக்கும் பெண்மை கண்சிமிட்டுகிறது. இதழ்கள் ஏங்குகின்றன. ஒரு ஹாலியுட் படத்தை பார்த்த திருப்தி கிடைக்கும்.