சாகர் பென்டிலா தயாரிப்பில் பவன்குமார் இயக்கத்தில் கண்ணாரவி, சஞ்சீவ் வெங்கட், ஷர்விதா, விஷ்ணுதேவி, ரேகா நாயர், லாவண்யா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “வேடுவன்”. கண்ணாரவி அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரு நடிகர். இவர் படங்களில் நடிக்கும்போது அக்கதை உண்மைக்கு நெருக்கமாக இருந்தால் மட்டுமே நடிப்பார். இல்லையென்றால் பாதியிலேயே போய்விடுவார். இதனால் இவரை நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள். இந்த சூழ்நிலையில் ஒரு இயக்குனர் இவரிடம் ஒரு கதை சொல்ல வருகிறார். அந்த கதைப்படி கண்ணாரவி ரவுடிகளை சுட்டுக் கொல்லும் ஒரு காவல்காரர். இதைக் கேட்டதும் கண்ணாரவி நடிக்க ஒப்புக் கொள்கிறார். ஆனால் தயாரிப்பாளர் தயங்குகிறார். படத்தை முழுவதும் நடித்துக் கொடுக்கிறேன் அதில் மாற்றம் இருக்காது என்று கண்ணாரவி உறுதியளித்ததால் படபிடிப்பை தொடங்குகிறார்கள். படம் முக்கால்வாசி நடித்துக் கொடுத்துவிட்டார், மீதி கால்வாசிதான் நடித்துக் கொடுக்க வேண்டும். அந்த உச்சக்கட்ட காட்சி உண்மைக்கு மாறாக இருக்கிறது. அந்த உண்மை என்ன? பேசியபடி படத்தை நடித்து கொடுத்தாரா இல்லையா? என்பதுதான் கதை. அரசியல்வாதிகளுக்கும் பெரும் முதலாளித்துவத்துக்கும் தலைவணங்கும் சில காவல்த்துறையின் உச்சபட்சி அதிகாரிகளின் முகத்திரையை இயக்குநர் பாவன்குமார் கிழித்தெறிந்திருக்கிறார். ரவுடியை வேவு பார்க்க பிச்சைக்காரராகவே திரையில் வாழ்ந்து காட்டுகிறார் கண்ணாரவி. சஞ்சீவ் சிறுவயதுமுதல் 40 கொலைகளை செய்த ரவுடி என்பதால் அவரை சுட்டுக் கொல்ல காவல்த்துறை உயர் அதிகாரி கண்ணாரவிக்கு உத்தரவிடுகிறார். ஆனால் அந்த சஞ்சீவ் தற்போது தன் கல்லூரிக் காதலி விஷ்ணுதேவியின் கணவர் என்பது தெரியவருகிறது. அதுமட்டுமல்லாமல் சஞ்சீவை ஊர்மக்கள் தெய்வமாக போற்றுகிறார்கள். அவரை சுட்டுக்கொல்லவா? வேண்டாமா? என்ற தவிப்பில் கண்ணாரவி நடிப்பின் உச்சத்தை தொட்டிருக்கிறார். அப்படியொரு உணர்வுப்பூர்வமான நடிப்பைத் தந்து ரசிகர்களின் பாராட்டை பெறுகிறார். ரவுடிசத்தையும் அமைதியையும் ஒரே நேரத்தில் தன் முகத்தில் படரவிட்டு சஞ்சீவ் கைத்தட்டலை பெறுகிறார். கள்ளங்கபடமற்ற மனைவியாக எதார்த்தமாக நடிப்பை கையாண்டு கைத்தட்டலை பெறுகிறார் விஷ்ணுதேவி. கண்ணாரவிக்கு மனைவியாக நடித்திருக்கும் ஷர்விதாவுக்கு அதிக வாய்ப்புகள் இல்லையென்றாலும் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு நடித்திருக்கிறார். ரேகா நாயர் ரவுடி கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொறுந்தியிருக்கிறார். கணவர் சாவுக்கு நாக்கை துறுத்தி இரண்டே இரண்டடி குத்தாட்டம் போட்டு முடிக்கும் காட்சியில் பார்வையாளர்களை கவர்ந்துவிட்டார். இப்படத்திற்கு திரைமறைவு கதாநாயகன் பின்னணி இசைதான். அருமையான துப்ப்றிவு நாவலை ஜீ5 தளத்தில் கண்டு ரசிக்கலாம்.
“வேடுவன்” தொடர் விமர்சனம்
