அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைதல்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகுதமிழ் நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி மு.பழனிசாமி அவர்களை, அவரது இல்லத்தில் 12.8.2019 திங்கட் கிழமை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகிய தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியச் செயலாளரும், ஒன்றியக் குழு முன்னாள் தலைவருமான திரு.தருமராஜ் அவர்கள் நேரில்சந்தித்து தன்னைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வின் போது அண்ணா தொழிற்சங்கப் பேரவை கன்வீனர் திரு. ஜக்கையன், கூடலூர் நகர மன்ற முன்னாள் தலைவர் திரு.அருண்குமார், கம்பம் திரு. ஜெகன்நாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களை அவரது இல்லத்தில் 12.8.2019 திங்கட் கிழமை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகிய தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியச் செயலாளரும், ஒன்றியக் குழு முன்னாள் தலைவருமான திரு. தருமராஜ் அவர்கள் நேரில் சந்தித்து, தன்னைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வின் போது அண்ணா தொழிற்சங்கப் பேரவை கன்வீனர் திரு. ஜக்கையன், கூடலூர் நகர மன்ற முன்னாள் தலைவர்
திரு. அருண்குமார், கம்பம் திரு ஜெகன்நாதன் ஆகியோர் உடனிருந்தனர்.