அமீரகம் உள்ளிட்ட வளைகுடா முன்னாள் மாணவர்கள் காணொலி வாயிலாக கலந்து கொண்ட திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி நிறுவனர் நாள் விழா

துபாய், 17.07.2020. அமீரகம் உள்ளிட்ட வளைகுடா முன்னாள் மாணவர்கள் காணொலி வாயிலாக கலந்து கொண்ட திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி நிறுவனர் நாள் விழா 11.07.2020 சனிக்கிழமை மாலை நடைபெற்றது. ஹாஜி எம். ஜமால் முஹம்மது சாஹிப் மற்றும் ஜனாப். என்.எம். காஜாமியான் இராவுத்தர் ஆகியோர் திருச்சி ஜமால்  முஹம்மது கல்லூரியின் நிறுவனர் ஆவர். இந்த நிறுவனர் நாளையொட்டி நடந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ். இஸ்மாயில் முகைதீன் வரவேற்புரை மற்றும் தலைமையுரை நிகழ்த்தினார். கல்லூரியின் தலைவர் ஹாஜி எம்.ஜே. ஜமால் முஹம்மது பிலால், செயலாளர் மற்றும் தாளாளர் டாக்டர் ஏ.கே. காஜா  நஜீமுதீன், பொருளாளர் ஹாஜி எம்.ஜே. ஜமால் முஹம்மது, உதவிச் செயலாளர் முனைவர் கே. அப்துல் சமது, கூடுதல்  துணை முதல்வர் முனைவர் எம். முஹம்மது சிஹாபுதீன், தன்னிதிப்பிரிவின் இயக்குநர் மற்றும் நிதியாளுநர் முனைவர்  கே.என். அப்துல் காதர் நிஹால், முன்னாள் மாணவர் சங்க பொதுச் செயலாளர் முனைவர் ஆர். ஜாஹிர் உசேன்  உள்ளிட்ட பலர் முன்னிலை மற்றும் வாழ்த்துரை நிகழ்த்தினர்.

பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமத்தின் நிறுவனர் மாண்புமிகு டி.ஆர்.  பாரிவேந்தர் தொடக்கவுரை நிகழ்த்தினார். அன்பே ஜமால் எனும் தலைப்பில் உத்தமபாளையாம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரியின் பேராசிரியர் மானசீகன், கவிஞர் கோ. வசந்தகுமாரன், சிகரம் தொட்ட அகரம் எனும் தலைப்பில் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி தமிழ்த்துறையின் பேராசிரியர் கவிஞர் க. அப்துல் ரஹீம் உள்ளிட்டோர் கவிதை பாடினர். துணை முதல்வர் ஏ. முஹம்மது இப்ராஹிம் நன்றியுரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அமீரக முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் முஹம்மது இசாக், முதுவை ஹிதாயத், சிங்கப்பூர்  முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி முனைவர் முஹைதீன் அப்துல் காதர், குவைத் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி  களிமங்கலம் இத்ரீஸ் பாவா உள்ளிட்ட பலர் தங்களது கல்லூரி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தமிழாய்வுத் துறையின் இணைப் பேராசிரியர் கா. முஹம்மது இஸ்மாயில், முன்னாள் மாணவர் சங்க உதவி பொதுச்
செயலாளர் முனைவர் மு.செய்யது அலி பாதுஷா உள்ளிட்ட குழுவினர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர்.