எனது தேசத்தைப் பார் என்ற இணைய கருத்தரங்குத் தொடரின் கீழ் ‘இமயமலையில் மலையேற்றம் – மாய அனுபவங்கள்’’ என்ற தலைப்பில் மத்திய சுற்றுலா அமைச்சகம் நடத்திய 32வது இணையக் கருத்தரங்கு

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் ‘எனது தேசத்தைப் பார்’ என்ற இணையக் கருத்தரங்கு தொடரின் 32வது கூட்டம், “இமயமலையில் மலையேற்றம் – மாய அனுபவங்கள்’’ என்ற தலைப்பில் கடந்த ஜூன் 13ம் தேதி நடைபெற்றது. இது இந்திய இமயமலைப் பகுதியின் தனிச்சிறப்பான, மாய சுற்றுலா அனுபவங்களை முன்னிலைப்படுத்தியது. இந்திய இமயமலைப் பகுதியில், இயற்கையான வளம், பனி படர்ந்த பைன் மரக் காடுகள் மற்றும் பொதிந்திருக்கும் பல ரகசியங்களைக் காண முடியும். இது உலகம் முழுவதும் உள்ள பல வயது மலையேற்ற வீர்ர்களை கவர்ந்திழுக்கிறது. இங்கு எண்ணற்ற தடங்களை ஆய்வுசெய்வது, உள்ளூர் மக்களுடன் பழகுவது, ஏரிகள், ஆறுகள், புல்வெளிகளை பார்ப்பது போன்றவை வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியளிக்கும் அனுபவங்களாகும். இவை இங்கு மீண்டும் வர திட்டமிட வைக்கும். ஒரே பாரதம், உன்னத பாரதம் திட்டத்தின்
கீழ், இந்தியாவின் வளமான பன்முகத்தன்மையை வெளிப்படுத்த மத்திய சுற்றுலா அமைச்சகம் மேற்கொள்ளும் முயற்சிதான் எனது தேசத்தை பார் என்ற இணையக் கருத்தரங்கு. ஜூன் 13, 2020ம் தேதி நடந்த எனது தேசத்தைப் பார் என்ற இணையக் கருத்தரங்கு தொடர் கூட்டத்தை சுற்றுலாத்தறையின் கூடுதல் தலைமை இயக்குனர் திரு ருபிந்தர்பிரார் நடத்தினார்.

இந்த இணைய கருத்தரங்கின் கூட்டங்களை
https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured என்ற இணையதளத்திலும், சுற்றுலாத் துறையின் சமூக ஊடகதளங்களிலும் காணலாம்.