சென்னை 27, மே.:- ஸ்டான்லி மருத்துவமனையின் உதவியுடன் சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையத்தைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்
தொடங்கி வைத்தார்.
உடன் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி இ.ஆ.ப, ஸ்டான்லி மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் பாலாஜி மற்றும் பலர் உள்ளனர்.