சுஷாந்த் சிங் நடித்த “தில் பெச்சாரே” படத்தின் தாரே கின் பாடல் வெளியீடு

சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்த கடைசி படம் தில் பெச்சாரே. இந்தப் படத்தில் சுஷாந்த் ஜோடியாக சஞ்சனா சங்கி நடித்துள்ளார். முகேஷ் சப்ரா இயக்கிய இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் டைட்டில் ட்ராக் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல மக்களிடையே வரவேற்பை பெற்றது.

தில் பெச்சாரே படத்தின் “தாரே கின்” இரண்டாவது பாடலை மோஹித் செளஹான் மற்றும் ஷ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை அமிதாப் பட்டாச்சார்யா எழுதியுள்ளார். மனதை மயக்கும் இப்பாடல் தற்போது வெளியாகி உள்ளது .ஜுலை 24-ம் தேதி நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் – OTTதளத்தில் “தில் பெச்சாரே ” வெளியிடப்படுகிறது