ஜூலை மாதம் சேகரிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் 87,422 கோடி ரூபாய்

2020 ஜூலை மாதத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி (GST) வருவாய், 87,422 கோடி ரூபாய், இதில் சிஜிஎஸ்டி (CGST) 16,147 கோடி ரூபாய், எஸ்ஜிஎஸ்டி (SGST) 21,418 கோடி ரூபாய், ஐஜிஎஸ்டி (IGST) 42,592 கோடி ருபாய் (பொருள்கள் இறக்குமதி செய்ய சேகரிக்கப்பட்ட 20,324 கோடி ரூபாய் உட்பட) மற்றும் செஸ் வரி 7,265 கோடி ரூபாய் (பொருள்கள் இறக்குமதி செய்ய சேகரிக்கப்பட்ட 7 807 கோடி ரூபாய் உட்பட). மத்திய சரக்கு மற்றும் சேவை வரிக்கு, (Central Goods and Service Tax – CGST) 23,320 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து (Integrated GST – IGST) மாநில சரக்கு மற்றும் சேவை வரிக்கு (State Goods and Services Tax – SGST), 18,838 கோடி ரூபாயும் வழக்கமான தீர்வாக அரசாங்கம் செலுத்தியுள்ளது. 2020 ஜூலை மாதத்தில் வழக்க மான தீர்வுக்குப் பிறகு மத்திய அரசும், மாநில அரசுகளும் சம்பாதித்த மொத்த வருவாய் சிஜிஎஸ் டிக்கு (CGST), 39,467 கோடி ரூபாய் மற்றும் எஸ்ஜிஎஸ்டிக்கு (SGST) 40,256 கோடி ரூபாய்.

இந்த மாதத்திற்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயில் 86 சதவீதமாகும். இந்த மாதத்தில், பொருள்கள் இறக்குமதியின் வருவாய் 84 சதவீதமாகவும், உள்நாட்டுப் பரிவர்த் தனையின் வருவாய் (சேவைகளின் இறக்குமதி உட்பட) கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த வழியாகக் கிடைத்த வருவாயில் 96 சதவீதமாகவும் இருந்தது. கடந்த மாதத்திற்கான வருவாய், நடப்பு மாதத்தை விட அதிகமாக இருந்தது. இருப்பினும், கடந்த மாதத்தில், கோவிட்-19 காரண மாக வழங்கப்பட்ட நிவாரணத்தின் காரணமாக, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் 2020 தொடர்பான வரிகளை அதிக எண்ணிக்கையிலான வரி செலுத்துவோர் செலுத்தினர் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். 5 கோடிக்கும் குறைவான விற்பனை முதல் கொண்ட வரி செலுத்துவோர் செப்டம்பர் 2020 வரை வருமானத்தைத் தாக்கல் செய்வதில் தளர்வு அனுபவித்து வருகின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்ளலாம். நடப்பு ஆண்டில் மாதாந்திர மொத்த ஜிஎஸ்டி (GST) வருவாயின் போக்குகளை வரைப்படம் காட்டுகிறது. ஜூலை, 2019 மற்றும் முழு ஆண்டோடு ஒப்பிடும்போது 2020 ஜூலை மாதத்தில் சேகரிக்கப்பட்ட ஜிஎஸ்டியின் மாநில வாரியான புள்ளிவிவரங்களை அட்டவணை காட்டுகிறது.