டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) கணினி அறிவியல் துறை கருத்தரங்கு

கோயம்புத்தூர் -641014: கணினி அறிவியல் துறை, டாக்டர் .ஜி. ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) “CHALLENGES IN CYBER SECURITY“ எனும் தலைப்பில் ஒரு நாள் இணைய வழி கருத்தரங்கினை ஆகஸ்ட் 13 -ம் தேதி ஏற்பாடு செய்திருந்தது. இறை வணக்கத்துடன் இந் நிகழ்ச்சி தொடங்கியது. டாக்டர். ஜி. ராதாமணி முனைவர் மற்றும் இயக்குனர் , கணினி அறி வியல் துறை, வரவேட்புறை வழங்கினார். டாக்டர். எஸ். சுஜாதா துறை தலைவர் கணினி அறிவி யல் துறை, திரு சியாம் சுந்தர் ராமசாமி, இணைய பாதுகாப்பு வல்லுநர், அவர்களை அறிமுகப் படுத்தினார். இவர் இணைய தாக்குதல்கள் மற்றும் அச்சறுத்தல்களை கண்டறிவதற் கான மென் பொருள் கருவிகளை அறிமுகப்படுத்தினார் மேலும், அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த செயல் விளக்கங்களை வழங்கினார்.

டாக்டர் என். சுதாபுவனேஸ்வரி, இணை பேராசிரியர், கணினி அறிவியல்துறை, டோம்னிக் கருணேசுதாஸ, டெக்கினிடிக்ஸ் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் புது டில்லி, அவர்களை அறிமுகப்படுத்தினார். இவர் ஃபிஷிங் தாக்குதல்கள் மற்றும் இணைய விளம்பரங்களின் மூலம் வரும் தாக்குதல்கள் பற்றி விளக்கினார். மேலும் பாதுகாப்பான உலாவியை பயன்படுத்துமாறு அறிவுத்தினார். இணையம் மற்றும் அதன் பயணப்பாட்டிற்காண கருவிகள் நம் வாழ்வில்
இன்றியமையாததாகி விட்டன. மக்கள் இணைய வழியில் தங்கள் பணியினை எவ்வாறு திறம்படவும் பாதுகாப்பாகவும் செய்வது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த கருத்தரங்கின் நோக்கமாகும். இரு வல்லுனர்களும் இணைய பயன்பாட்டின்போது செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை பற்றியயும், அனைவரும் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை பற்றியும் விளக்கினர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்து பங்கேற்றனர். இந்த காலகட்டத்தின் மிகவும் தேவையான ஒரு தலைப்பில் அமைந்த இந்த கருத்தரங்கை அனைவரும் பாராட்டினர். டாக்டர் ஆர். ஸ்ரீவித்யா, உதவி பேராசிரியர், கணினி அறிவியல் துறை, அவர்களின் நன்றி உரையுடன் கருத்தரங்கு இனிதே நிறைவுற்றது.