தமிழகத்திற்கான நீரை காவிரியில் கர்நாடகா அரசு திறக்க வேண்டும் – ஜவாஹிருல்லா

காவேரி மாவட்டங்கள் ககுறுவை சாகுபடி பாசனத்திற்காக பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூன் ௧௨ அன்று மேட்டூர் அணையிலிருந்து காவேரி நீரை தமிழக அரசு திறந்து விட்டுள்ளது. தண்ணீர் திறந்து ஒரு மாதகாலம் நெருங்கும் நிலையில் மேட்டுர் அணையின் நீர் இருப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டுர் அணையின் நீர் மட்டம் மொத்த அடியான 120 ல் தற்போது 78.48 அடியாக உள்ளது அதேபோல் மொத்த டி எம் சி யான 93.47யில் தற்போது 40.46 டி எம் சி யாகவே உள்ளது. இதேநிலை நீடித்தால் வெகுவிரைவில் மேட்டூர் ஆணையின் நீர் அளவு குறைந்துவிடும். இந்த நீரின் அளவு குறைந்தால் பாசனம் பதிக்கப்படும்.

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி நீரின்றி தடைபடாமல் நடைபெற யும் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, ஜூன் மாதத்திற்கு 9.19 டி.எம்.சி., ஜூலைக்கு 31.24 டி.எம்.சி என மொத்தம் 40.43 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று ஜூன் 10-ஆம் தேதி காணொளி மூலம் நடைபெற்றக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்டது. மேலும் தற்போது கர்நாடக மாநிலத்தில் பருவ மழை பெய்து வருவதால் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4 அணைகளின் மொத்தக் கொள்ளளவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, தமிழகத்திற்கான நீரை பெற காவேரி மேலாண்மை ஆணையதின் உத்தரவை நடைமுறைப்படுத்த தமிழக அரசு உரிய அழுத்தங்களை கொடுக்கவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன். என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.