சமூகவலைதளங்களில் திராவிட அரசியலையும் அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்பவர் கிஷோர் கே ஸ்வாமி. இவருக்கு பலத்த எதிர்ப்புகளும் ஆதரவுகளும் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி குறித்தும் அவதூறு கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் இவர் பெண் பத்திரிக்கையாளர் பொருத்தும் அவதூறு கருத்துக்களை பதிவு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து எழுந்த புகாரின் அடிப்படையில் இன்று காலை கிஷோர் கே ஸ்வாமி கைதுசெய்யப்பட்டார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக ஐடி விங் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அவர் ஜூன் 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இவரின் கைதுக்கு சமூக வலைதளங்களில் ஒரு சாரார் ஆதரவும், ஒரு சாரார் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.