திருக்குறளில் மனித மாண்புகள் தொடர்பாக பன்னாட்டு கருத்தரங்கம்

-செய்தியாளர் காஹிலா-

துபாய்: திருக்குறளில் மனித மாண்புகள் தொடர்பாக பன்னாட்டு கருத்தரங்கம் ஜூம் இணைய வழி செயலி வழியாக நடந்தது. திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி தமிழ்த்துறை, துபாய் தேசிய கல்வி அறக்கட்டளை மற்றும் சென்னை தேடல் களம் அறக் கட்டளை ஆகியோர் இணைந்து இந்த கருத்தரங்கை நடத்தினர். இந்த கருத்தரங்குக்கு பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியின் முதல்வர் முனைவர் சு.சுந்தரம் தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் முனைவர் அ. பாக்கியமுத்து வரவேற்புரை நிகழ்த்தினார். துபாய் தேசிய கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் ஆ. முகமது முகைதீன், சென்னை தேடல் களம் அறக்கட்டளையின் தலைவர் நந்திவரம் பா. சம்பத் குமார், பாளையங்கோட்டை தூய சவேரியார் தன்னாட்சி கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் இரா. பிரான்சிஸ் சேவியர், இலங்கை தேசிய கல்வி நிறுவனத்தின் தமிழ்மொழித்துறையின் முதுநிலை விரிவுரையாளர் முனைவர் முருகுதயாநிதி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அவர்களில் திருக்குறளில் மனித மாண்புகள் தொடர்பாக உரை நிகழ்த்தினர். இந்த நிகழ்வில் பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத், பல்வேறு கல்லூரிகளின் பேராசிரியர்கள் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.