திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப் படுத்தப்பட்ட மருத்துவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆரோக்கியம் சிறப்புத் திட்டம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் யோகா கற்றுத்தரப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு 07.08.2020 அன்று நேரில் சென்று பார்வையிட்டார்.