துணை முதல் அமைச்சர் திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களை சந்தித்து பிரமுகர்கள்

1) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களை, 26.9.2019 அன்று வியாழக் கிழமை 21.10.2019 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, காணை ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. ஆ.சு. முத்தமிழ் செல்வன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைத் துறை மற்றும் கனிம வளத் துறை அமைச்சருமான திரு. ஊ.ஏந. சண்முகம் அவர்களும் உடன் இருந்தார்.

2) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களை, 26.9.2019 அன்று வியாழக் கிழமை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த, புதுக்கோட்டை மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் திருமதி சு.சுபத்ரா, மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் திரு. சு. ராஜசேகரன் ஆகியோர் நேரில் சந்தித்து, தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வின்போது, கழக அமைப்புச் செயலாளரும், மாண்புமிகு சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சருமான டாக்டர் ஊ. விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டக் கழகச் செயலாளரும், தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான திரு. ஞ.மு. வைரமுத்து உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.