தோல் தொழில் துறை, ஏற்றுமதி சார்ந்த துறை என்றும், இத்துறையில், அடுத்த ஐந்தாண்டுகளில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் – அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே

தோல் தொழில் துறை, ஏற்றுமதி சார்ந்த துறை என்றும், இத்துறையில், அடுத்த ஐந்தாண்டுகளில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவித்தார். இந்த ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் கச்சா மற்றும் பாதியளவு தயாரிக்கப் பட்ட தோல்களுக்கு ஏற்றுமதி வரி சீரமைக்கப்படும் என்று அறிவித்ததன் காரண மாக இத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்தார்.

சென்னை உட்பட நாடு முழுவதும் உள்ள காலணி தயாரிக்கும் தொழிலாளர்கள், கவுரவமான முறையில் பணியாற்றுவதை உறுதி செய்யும் வகையில், தோல் துறை சார்ந்த திறன் மேம்பாட்டு கவுன்சில், தமது சமூகப் பொறுப்புணர்வு நிதி யிலிருந்து உதவி செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். குறிப் பாக, காலணி தயாரிக்கும் தொழிலாளர்களுக்குத் தேவையான குடை மற்றும் சிறு கடைகளை அமைத்து கொடுத்து, அவர்களது தொழிலை முறைப்படுத்த உதவு மாறும் கேட்டுக் கொண்டார்.

தோல் ஆடைகள் மற்றும் காலணி உற்பத்தியில், இந்தியா, உலகளவில் இரண் டாவது இடத்தில் இருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், உலகின் மொத்த தோல் உற்பத்தியில் இந்தியா 13% பங்கு வகிக்கிறது என்றார். வருங்காலத்திலும் இத்துறை மேலும் வளர்ச்சியடையக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக அவர் கூறினார். கடந்த காலத்தில், காலணி மற்றும் உப பொருட்கள் உற்பத்தியில் இந்தியா மிகுந்த பாரம் பரிய கைவினைத்திறன் கொண்ட நாடாக திகழ்ந்து வந்ததாகவும் தெரிவித்தார். ஆக்ரா, கான்பூர், ஆம்பூர் போன்ற தோல் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதிகளில் உயர் திறன் வாய்ந்த கைவினைஞர்கள், தரமான காலணிகளை தயாரித்து வருவ தாகவும் குறிப்பிட்டார். இந்தத் திறனை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று அமைச்சர் வலியுறுத்தினார். தோல் தொழில் துறையில் நூறு சதவீத அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசு, ஏற்றுமதி வரியை மாற்றி யமைத்து இருப்பதாகவும் தெரிவித்தார். தோல் தொழில் துறையில் காலத்திற் கேற்ற நாகரீக வடிவமைப்புகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். தோல் பொருட்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகம் இருப்பதால், அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, ஆடம்பர தோல் பொருட்கள் உற்பத்தியிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு. கே. பாண்டியராஜனும் கலந்துகொண்டார்.