மக்கள் மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு அஞ்சலி – இந்திய கம்யூனிஸ்டு கட்சி செலுத்தியது

தலைநகர் சென்னையில் வியாசர்பாடி பகுதியில் மக்கள் மருத்துவராக பணியாற்றி வந்த சேவகர் மருத்துவர் திருவேங்கடம் (70) 16.08.2020 அன்று அதிகாலை காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். சமூகத்தின் அடித்தட்டில், ஒடுக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்த திருவேங்கடம் மருத்துவம் பயின்று அரசு மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அரசுப் பணியில் இருந்த காலத்திலும் சரி, ஓய்வு பெற்ற பின்னரும் சரி அவரை அணுகும் நோயாளர் களிடம் கட்டணம் எதுவும் பெறுவதில்லை. நோயாளர்களே விரும்பிக் கொடுத்தாலும் அடை யாள பூர்வமாக ஐந்து ரூபாய் மட்டுமே பெற்றுக் கொள்பவர். இதில் மிகவும் வறுமை நிலையில் இருப்போருக்கு மருந்து வாங்க பண உதவி செய்து வந்த இணையற்ற மனிதாபிமானி. இவரது இணையர் சரஸ்வதி, பிரீதி என்ற மகளும் தீபக் என்ற மகனும், உள்ளனர். குழந்தைகள் இருவரும் மருத்துவர்கள். அவர்களிடம் மருத்துவர் திருவேங்கடம் “மக்களிடம் மருத்துவ சேவைக்கு கட்ட ணம் வசூலிக்க கூடாது” என அறிவுறுத்தி வந்தவர். இடதுசாரி சிந்தனை கொண்டவர். இயகங் களுடன் நெருக்கமான உறவில் இருந்தவர். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். மருத்துவர் திருவேங்கடம் அவர்களின் மறைவுக்கும், அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத் தினருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் ஆழ்ந்த இரங் கலை தெரிவித்துக் கொள்கிறோம், இவ்வாறு முத்தரசன் இரங்கல் செய்தியில் றிப்பிட்டுள்ளார்.