முல்லை பொpயாறு அணையிலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தண்ணீரை திறந்து வைத்தார்

தேனி மாவட்டம் முல்லை பொpயாறு அணையிலிருந்து பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) சார்பில் கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்காகவும் தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. 13.08.2020 அன்று தண்ணீரை திறந்து வைத்து தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி தமிழ்நாடு துணை முதலமைச்சரின் அறிவுரை யின்படி தேனி மாவட்ட கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதி வேளாண்குடி பெருமக்களின் வேண்டுகோளை ஏற்று முல்லை பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில் பெரியாறு அணையி லிருந்து 13.08.2020 முதல் கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்கு 14707 ஏக்கர் நிலங்களுக்கு 200 கன அடியும் தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக 100 கன அடியும் ஆக மொத்தம் விநாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வீதம் 120 நாட்களுக்கு முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் முதல் போக நெல் சாகுபடி 5200 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப் படுகிறது. முதல் போக நெல் சாகுபடிக்குத் தேவையான நெல் இரக விதைகளான என்.எல்.ஆர் 34449 11 மெ.டன்னும் ஆர்.என்.ஆர்-15048 50 மெ.டன்னும் கோ-51 43 மெ.டன்னும் ஆக மொத்தம் 104 மெ.டன் விதை மாவட்டத்திலுள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நெல் விதைகளுக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் மானியமாக கிலோவிற்கு ரூ.20-ம் விதைக் கிராமத் திட்டத்தில் ஒரு கிலோவிற்கு 50 சதவிகித மானியமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் விதையினை விதை நேர்த்தி செய்யத் தேவையான அம்மா உயிர் உரங்கள் 50 சதவிகித மான்யத்தில் விநியோகம் செய்ய போதுமான அளவு இருப்பு உள்ளது. வேலையாட்கள் பற்றாக்குறையினை போக்க தேசிய வேளாண்மை வளா;ச்சித் திட்டத்தின் கீழ் நடப்பாண்டு நெல்லில் இயந்திர நடவு மேற்கொள்ள ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.5000 வீதம் 300 எக்டருக்கு ரூ.15.00 லட்சம் நிதி இலக்கு பெறப்பட்டு இத்திட்டம் நடைமுறை படுத்தப்படவுள்ளது.

மேலும் மாவட்டத்திற்கு தேவையான இரசாயன உரங்களான யூரியா-1243 மெ.டன்னும் டி.ஏ.பி-454 மெ.டன்னும் பொட்டாஸ்;-1153 மெ.டன்னும் கலப்புரங்கள்-3920 மெ.டன்னும் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்களிலும் தனியார் உர விற்பனையாளர்களிடமும் இருப்பு வைக்கப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. எனவே விவசாய பெருமக்கள் தாங்கள் சாகுபடி செய்யும் நெல் பயிரில் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்களை கடைபிடித்து தண்ணீ ரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று பயன்பெறுமாறு தெரிவித்தார். இந்நிகழ்ச் சியில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சாய் சரண்தேஜஸ்வி இ.கா.ப. மதுரை பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) பெரியாறு வைகை வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் வா.சுகுமாறன் ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் நல சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.