முழு ஊரங்கின்போது ஆணையர் ஆய்வு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் முழு ஊரடங்கையொட்டி தங்கசாலை (மின்ட்) சிக்னல் அருகே நடைபெற்று வரும் காவல் குழுவினரின் வாகன தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார். சென்னையில் முழு ஊரடங்கையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 28.06.2020) அன்று காலை தங்கசாலை (மின்ட்) சந்திப்பு சிக்னல் அருகில் காவல் குழுவினர் மேற்கொண்டு வரும் வாகனத் தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து காவல் ஆளிநர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். இந்நிகழ்வின்போது வடக்கு மண்டல இணை ஆணையாளர் திரு.கபில்குமார் சி.சரத்கர், இ.கா.ப, பூக்கடை காவல் துணை ஆணையாளர் திரு.எஸ்.ராஜேந்திரன்,இ.கா.ப., வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையாளர் திருமதி.ஜி.சுப்புலஷ்மி மற்றும் காவல் அதிகாரிகள்
உடனிருந்தனர்.