ஸ்டெர்லைட் ஆலை திறக்க தடை நீடிக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு – இந்திய கம்யூனிஸ்டு

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் (தாமிர உருக்கு மற்றும் உருட்டாலை) ஆலை அமைக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் இருந்து. அதனால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகளை எதிர்த் தும், நிலம், நீர்,காற்று மாசு பட்டு, அதில உருவான சுகாதாரக் கேடுகளால் மக்கள் நல் வாழ் வு கடுமையாக பாதிக்கப்படுவதை எதிர்த்தும் போரா ட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் உச்ச கட்ட மாக கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி தொடங்கி மே 22 வரை தொடர்ந்து போராட்டங்களில் மக்கள் பெருமளவு திரண்டு போராடி வந்தனர். இந்தப் போராட்டத்தில் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 வயது பெண் உட்பட்ட 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மே 28, 2018 ஸ்டெர்லைட் ஆலை யை தமிழ்நாடு அரசு நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்டெர் லைட் ஆலை நிர்வாகம், ஆலையை திறக்க சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.  இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆலை திறக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கும், என கூறி வேதாந்த நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இது உயிர் ஈகை செய்து நடத்திய மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. இதன் மீது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதாக வேதாந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை நிலை நிறுத்தப்பட்ட சட்ட நிலையை உச்ச நீதிமன்றத்தில் உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு, வழக்கை எச்சரிக்கையாகவும், வாதங்களை உறுதியாகவும் முன் வைத்து, தூத்துக்குடி மாவட்ட மக்களின் ஆரோக்கிய வாழ்வை உறுதிப் படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறது என முத்தரசன் தெரிவித்துள்ளார்