“ பண்டித ஜவஹர்லால் நேரு” ஒரு அழிக்க முடியாத ஆளுமை! – ஜோதிமணி எம்.பி.,

கரூர் 28, மே.:- மறைத்த முன்னாள் இந்தியப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதிலிருந்து.

 

அடிமை இந்தியாவில் போராடிக்கொண்டே சுதந்திர இந்தியாவைப் பற்றி கனவுகண்டவர் நேரு. அந்த கனவுதான் பின்பு இந்தியாவை ஒரு மாபெரும் நவீன, ஜனநாயக நாடாக மாற்றியது. உலக அரங்கில் இந்தியாவிற்கென்று ஒரு அந்தஸ்தை உருவாக்கியது. ஆங்கில ஆட்சியில் முன்னூறு ஆண்டுகளாக உருக்குலைந்து கிடந்த, பல்வேறு சாதிகள், மதங்கள், இனங்கள் என்று பிரிந்து கிடந்த தேசத்தை தனது சகாக்களின் துணையோடு வெறும் பதினேழு ஆண்டுகளில் கட்டியெழுப்பிய மாபெரும்
சாதனைக்குச் சொந்தக்காரர். கல்வி, கலை, அறிவியல், விஞ்ஞானம், நீர் மேலாண்மை,விவசாயம் என்று அவர் கனவுகாணாத துறைகளே இல்லை. அத்தனையையும் செயல்படுத்திக் காட்டியவர் என்பதுதால் தான் அவர் ஒரு அழிக்க முடியாத ஆளுமை. அவர் கனவு கண்டு உருவாக்கிய இந்தியாவைக் கட்டிக் காப்பதுதான் நாம் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி.