வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் குறைகளைக் கேட்ட; எம்.பி., எம்.எல்.ஏ.!

கன்னியாகுமரி 28, மே.:- கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு எற்பட்டு கரையோரம் உள்ள வீடுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக பார்த்திவபுரம் அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் நித்திரவிளை பேரிடர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். கிள்ளியூர்  சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் நேரில் சென்று குறைகளை கேட்டு, முஞ்சிறை ஆணையாளர் விஜயன் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடம் மக்களின் அத்தியாவசிய தேவைகளை உடனே நிறைவேற்றுமாறு கேட்டுக் கொண்டனர்.