மீண்டும் இணைந்த சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், இளையராஜா கூட்டணி

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக தரமான படைப்புகளை வழங்கி வரும் சத்ய ஜோதி in பிலிம்ஸ் நிறுவனம், மறுபடியும் ஒரு நினைவுகூரத்தக்க கூட்டணியை உருவாக்கியுள்ளது. தயாரிப்பாளர் தியாகராஜன் மற்றும் இளையராஜா, 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கைகோர்த்து “லெனின் பாண்டியன்” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்கவுள்ளனர். அற்புதமான ஒரு சிறு காணொளி மூலம் படக்குழு இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.  ஒரு காரில்,  சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், இசைஞானி இளையராஜா இருவரும் தங்களின் அற்புதமான படங்களின் பழைய பாடல்களை கேட்டுக்கொண்டே பயணிக்கும் அழகான அனிமேசன் வீடியோ இணையம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.  இந்த கூட்டணி தமிழ்சினிமாவில் ஏற்கனவே பல மறக்க முடியாத படைப்புகளை வழங்கியுள்ளது. குறிப்பாக மூன்றாம் பிறை (1982), தங்க மகன் (1983), காக்கி சட்டை (1985), பகல் நிலவு (1985), காதல் பரிசு (1987), கிழக்கு வாசல் (1990), பணக்காரன் (1990), இதயம் (1991) ஆனஸ்ட் ராஜ் (1994) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து பணியாற்றி பல கல்ட் கிலாசிக் படங்களை வழங்கி, ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணி, பழைய அற்புத நினைவுகளை மீட்டெடுப்பதோடு, புதிய தலைமுறைக்கும் ஒரு வலுவான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.******

தொழில்நுட்ப குழு விபரம்: தயாரிப்பு நிறுவனம் – சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு – T.G.தியாகராஜன் எழுத்து இயக்கம் – D.D பாலச்சந்திரன் ஒளிப்பதிவு – A. Mஎட்வின் சகாய் எடிட்டிங்க்    நாகூரான் இராமச்சந்திரன்  ஸ்டண்ட் – தளபதி தினேஷ் கலை இயக்கம் – அதூரி ஜெய்குமார் மக்கள் தொடர்பு – AIM சதீஷ்