ஸ்டாலின் மேயராக இருந்தபோது அரசாணை இல்லாமல் ராஜா சங்கருக்கு பதவி கொடுத்தை விளக்க முடியுமா என கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்

கடந்த இரண்டு நாட்களாக தி.மு.க. தலைவர் அண்ணன் ஸ்டாலின் அவர்களும் முன்னாள் அமைச்சர் நேரு அவர்களும் உள்ளாட்சித் துறைப் பற்றி சில கேள்விகள் கேட்டு வருகிறார்கள். குறிப்பாக சென்னை மாநகராட்சியின் முதண்மை தலைமைப் பொறியாளராக இருந்த புகழேந்தியை நகராட்சிகள் ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளராக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி எப்படி நியமித்தார்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.இந்த நியமனத்திற்கு தமிழகஅரசின் அரசாணை (Govt.G.O) பெறப்பட்டுள்ளது. இந்த நியமனத்திற்கு அண்ணன் ஸ்டாலின் சி.பி.ஐ. விசாரணை கேட்டிருக்கிறார்.

நான் அண்ணன் ஸ்டாலினை சில சந்தேக விளக்கம் கேட்க விரும்புகிறேன். அண்ணன் ஸ்டாலின் மேயராக இருந்த போது அவரது நெருங்கிய நண்பர் ராஜா சங்கரை -Special P.A. Bridges for Mayor -மேயருக்கான சிறப்பு அதிகாரி – பாலங்கள், என்று ஒரு புதிய பதவியை உருவாக்கி ராஜா சங்கரை அண்ணன் ஸ்டாலின் நியமித்தார். ராஜா சங்கர் நியமனத்திற்கு எவ்வித அரசாணை கிடையாது. மன்றத்தில் ஒப்புதலும் கிடையாது. (Council Resolution) மேயர் ஸ்டாலின் தலைமையில் இரண்டு மன்ற உறுப்பினர்கள் உள்ள நியமனக் குழு (Appointment Committee) ஒப்புதல் மட்டும் பெற்று மேயர் ஸ்டாலின் ராஜா சங்கரை இந்த பொறுப்பிற்கு நியமத்தார். ஆனால் ராஜா சங்கர் மேயருக்கு இணையான அந்தஸ்த்தில் கமிஷனர், துணை ஆணையர் பணிகள் (DC Works) மற்றும் அணைத்து அதிகாரிகளும் ராஜா சங்கரிடம் ஆலோசனை மற்றும் உத்தரவுகளை பெற வேண்டும், பணி ஆய்வு, டெண்டர் யாருக்கு என்று முடிவு செய்வது என்று சர்வ வல்லமை படைத்த மேயருக்கு இணையான பதவியை எப்படி வழங்கினார்கள், இதற்கு எந்த வகையான விசாராணைக்கு உத்தரவிடலாம் என்று அண்ணன் ஸ்டாலின் சொன்னால் நல்லது. என்று முன்னாள் மேயர் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.