அருண் விஷ்வா தயாரிப்பில் ஶ்ரீகனேஷ் இயக்கத்தில் சரத்குமார், தேவாணி, சித்தார்த், யோகிபாபு, மீதா ரகுநாத், ஷாய்த்ரா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ” 3 பி.ஹச். கே.”. வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒரு நடுத்த்ர குடும்பத்தினர் ஒரு சொந்த்க வீடு வாங்கும் கனவை ஒரு திரைக்காவியமாக படைத்துள்ளார் இயக்குநர் ஶ்ரீகனேஷ். சரத்குமார் தனது மனைவி தேவயாணி, மகன் சித்தார்த், மகள் மீதா ரகுநாத்துடன் ஒரு சிறிய வாடகை வீட்டில் நடுத்தர குடும்பவாசியாக வாழ்ந்து வருகிறார். மூன்று அறைகள் கொண்ட ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற உறுதியுடன் சிறுக சிறுக பணம் சேர்த்து வருகிறார். மகன் சித்தார்த் சிறுவயது முதலே படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டுப் பிள்ளையாக வளர்ந்து வருகிறார். பாடசாலை தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்களே பெறுகிறார். ஆகையால் மகனின் படிப்புக்காக சேர்த்து வைத்திருக்கும் பணத்திலிருந்து தனியாரிடம் பாடப்பயிற்சிக்கு பணத்தை செலவிடுகிறார். இதுசித்தார்த்தின் கல்லூரி வரை படிபுக்காகவே செலவிடுகிறார். முடிவில் சொந்த வீடு வாங்கினாரா? இல்லையா என்பதுதான் கதை. ஒரு நடுத்தர குடும்பவாசியின் எளிமையான வாழ்க்கைய அற்புதமாக காட்டி நடித்துள்ளார் சரத்குமார். வெள்ளப் பெருக்கில் வளைந்து கொடுத்து நிமிர்ந்து நிற்கும் நாணலைப்போல தலை நிமிர்கிறார் சரத்குமார். ஒரு நடுத்தர குடும்பத்தலைவனின் இயற்கை குணாதிசயங்களை உடல் மொழியால் பேசும் வித்தையை நன்றாக கற்று தேர்ந்திருக்கிறார் சரத்குமார். பாடசாலை சிறுவனாகவ்ம், கல்லூரி மாணவனாகவும், காதலில் ஈர்க்கப்படும் வாலிபனாகவும், தந்தையின் கனவுகளை தாங்கி நிற்கும் மகனாகவும் என பல பரிணாமங்கள் வளர்ச்சி பெற்ற நடிகனாகவே தன்னை மாற்றிக் கொண்டு சித்தார்த் நடிதிருப்பது கைதட்டி வரவேற்க வைக்கிறது. எதிர்காலத்தைப்பற்றிய சிந்தனையிலேயே வாழ்க்கையை தொலைத்துவிடாமல், நிகழ்காலத்திலேயே வாழ்க்கையை வாழ்ந்துவிட வேண்டும் என்ற சித்தார்த்தின் சிந்தனை அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கிறது. கணவனின் சோகங்களை தாங்கும் ஒரு சுமைதாங்கி பெண்ணாக தேவயாணியின் நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. சித்தார்த்தின் தங்கையாக நடித்திருக்கும் மீதா ரகுநாத், பூ போன்று சிரிப்பதிலும் மூச்சுக்காற்றை அனல்காற்றாக்கி வீசுவதிலும் கைதேர்தவராக நடித்து பாராட்டை பெறுகிறார். படத்தில் யோகிபாவை சரியாக பயன்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. மொத்தத்தில் இயக்குநர் ஶ்ரீகணேஷ் சோக கடலில் மூழ்கவைத்து ஒரு முத்தை கொடுத்துள்ளார்.
3 பி.ஹச்.கே. திரைப்பட விமர்சனம்
