செல்வராகவன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு பூஜை

இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் தனது அடுத்த சினிமா பயணத்தை ஒரு புதிய திரைப்படத்துடன் ஆரம்பிக்கிறார். இந்தப் படத்தை “வோம் எண்டர்டெய்மண்ட்ஸ்   நிறுவனம் தயாரிக்க,  விஜயா சதீஷ் அதை வழங்குகிறார். அந்த திரைப்படத்திற்கான பூஜையும், சில படப்பிடிப்புகளும் தமிழ்நாட்டில் உள்ள சேலத்தில்  நடைபெற்றது.இந்தப் படத்தில் இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் நடிக்கிறார். அவருடன்  நடிகை குஷி ரவி இணைந்து நடிக்கிறார். இவர்களுடன்,  நடிகர்கள் ஒய்.ஜி.மஹேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ், சேலம் தீபக், ஹேமா, லிர்த்திகா மற்றும் என். ஜோதிகண்ணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.*********

தொழில்நுட்பக் குழுவின் விவரங்கள்: இயக்குநர்: டென்னிஸ் மஞ்சுநாத் ஒளிப்பதிவாளர்: ரவி வர்மா K தொகுப்பாளர்: தீபக் S இசையமைப்பாளர்: A. K. பிரியன் கலை இயக்குநர்: பாக்கியராஜ் சண்டை இயக்குநர்: மான்ஸ்டர் முகேஷ் நிர்வாக தயாரிப்பாளர்: தேனி தமிழ் தயாரிப்பு மேலாளர்: M. S. லோகநாதன் ஆடை வடிவமைப்பாளர்: பிரியங்கா ஜெயராமன் நடிகர் தேர்வு இயக்குநர்: ஸ்வப்னா ராஜேஸ்வரி ஆடை பணியாளர்: A. கதிரவன் விளம்பர வடிவமைப்பு: பவன் ரெடாட் ஸ்டில்ஸ் புகைப்படம்: ஜி. கே மேக்கப்: ஏ. பி. முகம்மது நடன இயக்குநர்: ஹாப்பிசன் ஜெயராஜ் ஊடக தொடர்பாளர்: ரேகா தயாரிப்பாளர்: விஜயா சதீஷ் சிறந்த இயற்கை சூழலால் செழித்த சேலத்தில் இந்தப் படத்தின் முதன்மை படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த நம்பிக்கையூட்டும் திரைப்படத்தை திரையுலகிற்கு கொண்டு வர படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர் உள்ளிட்ட மேலும் பல தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.