ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து புதிய திரைப்படத்தை துவக்குகிறார் அபாஸ்

90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார். இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ்குமாருடன் இணைந்து, தற்போது பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் அபாஸ். இப்படம், பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். இதனை ஜெயவர்த்தனன் தயாரிக்க, ஜெய்காந்த் சுரேஷ் இணை தயாரிப்பாளராக உள்ளார்.  நடிகர் பிரதீப் ரங்கநாதனின் முன்னாள் உதவியாளர் மரியா ராஜா இலஞ்செழியன் இப்படத்தை இயக்குகிறார். ஸ்ரீ கௌரி பிரியா, கதாநாயகியாக நடிக்கிறார். இது ஒரு நகைச்சுவை நிரம்பிய குடும்பக் கொண்டாட்டப் படம் எனக் கூறப்படுகிறது. அனைத்து வயதினரையும் கவரும் படமாக உருவாகுகிறது.*******

திரைத்துறையின் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றுகின்றனர் :

இசை – ஜஸ்டின் பிரபாகரன் ஒளிப்பதிவு – மதன் கிறிஸ்டோபர் படத்தொகுப்பு – செல்வா ஆர்.கே ஆர்ட் டைரக்ஷன் – குமார் கங்கப்பன் ஆடை வடிவமைப்பு – பிரவேண் ராஜா இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம், பெரிதும் ரசிக்கக்கூடிய ஒரு முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தின் தலைப்பு மற்றும் அப்டேட்டுகள் விரைவில் அறிவிக்கப்படும். தமிழ் திரையுலகில் அபாஸின் கம்பேக், ரசிகர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.