நம் முன்னோர்கள் தங்கள் உடமைகளையும் உயிர்களையும் தியாகம் செய்து நமக்கு வாங்கிக்கொடுத்த சுதந்திரம்… நாம் சுதந்திரம் பெற்றதின் நோக்கம், நம்மை நாமே ஆளும் குடியாட்சியைப்பெறுவதே. அந்தக்குடியாட்சியின் தத்துவம் என்பதே, நம்மை ஆள்பவர்களை நாமே தேர்ந்தெடுக்கும் உரிமை. அந்த உரிமை நம் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. அந்த “வாக்குரிமை” தான், ஜனநாயகத்தின் உயிர் மூச்சு. அந்த உரிமை எந்தவொரு தனிமனிதனுக்கு மறுக்கப்பட்டாலும், அது நம் தேசத்தை சர்வாதிகாரக் குழிக்குள் தள்ளி விடும். அந்த நிலைமை ஏற்பட்டு விடாமல், நம் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டியது, ஒவ்வொரு தனிமனிதனின் தார்மீக கடமையாகும். அது தான், நம் நாட்டுக்காகப் போராடி, உயிர்த்தியாகங்கள் செய்த, நம்சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனும், மரியாதையுமாகும். ஆகவே, சுதந்திர தினத்தை கொண்டாடுவதென்பது, வெறும் கொடிகளை ஏற்றி கலைந்து விடாமல், நம் தேசத்தின் அரசியல் சாசன சட்டத்தையும், அது தரும் ஜனநாயக கோட்பாடுகளையும், அதன் விழுமியங்களையும், அந்த இறையாண்மையையும் கட்டிக்காக்க, இந்நாளில் உறுதியேற்க வேண்டும்.******