விஜய் கெளரிஷ் புரெடெக்ஷன்ஸ் மற்றும் நியானத் மீடியா அண்ட் டெக்னாலஜி மற்றும் மாரி மூவீஸ் சார்பில், கௌரி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி தயாரிப்பில், எஸ்.எஸ்.முருகராசு இயக்கத்தில், கிராமிய பின்னணியில் ஒரு அசத்தலான வணிக ரீதியில் உருவாகியுள்ள திரைப்படம் “கடுக்கா”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெள்ளோட்டம் விடப்பட்டது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ஆனந்த் பொன்னுசாமி பேசியதாவது: எங்கள் அழைப்பை மதித்து வந்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தை மிக கஷ்டப்பட்டு ஒரு குழுவாக உழைத்து, உங்கள் முன் கொண்டு வந்துள்ளோம். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்..இயக்குநர் SS முருகராசு பேசியதாவது: *இந்தப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த தயாரிப்பாளர்கள் கௌரி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி இருவருக்கும் நன்றி. அனைவரும் கடுமையாக உழைத்து இப்படத்தை எடுத்துள்ளோம். படம் எடுத்த அந்த ஊரில் எல்லோரும் மிகவும் உதவியாக இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. என்னைப் பொறுத்தவரை எங்கள் படம் மிகச்சிறந்த படம், இனி நீங்கள் தான் படம் பார்த்துச் சொல்ல வேண்டும், அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது “கடுக்கா படத்தை வாழ்த்த நிறையப் பிரபலங்கள் வந்துள்ளார்கள். படக்குழு ஒரு பாட்டிலேயே ஈர்த்து விட்டார்கள். பெயரிலேயே ஆனந்தத்தை வைத்திருக்கும் இந்த தயாரிபபளர்களுக்கு வாழ்த்துக்கள். படத்தில் பெண்கள் சம்பந்தமாகச் சிறப்பான கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.********
வாழ்த்துக்கள். சினிமாவில் நாம் சரி செய்ய வேண்டிய விசயம் நிறைய இருக்கிறது. திரையரங்கில் இஷ்டத்துக்கு ஷோ தருகிறார்கள், எந்த ஷோ நம்ம படம் ஓடுகிறது என்றே தெரியவில்லை. இதை ஒழுங்குபடுத்த வேண்டும். நாம் படமெடுத்துக் கொண்டிருந்த காலத்தில் ரஜினி சார் படம் 100 தியேட்டரில் வெளியானால் அடுத்து 16 படங்கள் வெளியாக தியேட்டர் இருக்கும். ஆனால் இப்போது ஒரே படத்தை எல்லாத் தியேட்டரிலும் போட்டு வசூலை அள்ள, மற்ற படங்களை ஓட விடமால் செய்து விடுகிறார்கள். குறைந்த பட்சம் சின்ன படங்களுக்கு ஒரு வாரம் 4 ஷோ தர வேண்டும். இதைத் தயாரிப்பாளர் சங்கங்கள் உறுதி செய்ய வேண்டும். இந்தப்படத்தை அழகாக எடுத்துள்ளார்கள். இசையமைப்பாளர் ஒரே பாட்டில் கலக்கிவிட்டார். கிராமிய படங்கள் தான் பெரிய வெற்றியைத் தரும். கடுக்கா மிகச்சிறப்பான வெற்றியைப் பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.
இயக்குநர் பேரரசு பேசியதாவது…*தனஞ்செயன் ஒரு படத்தை ரிலீஸ் செய்கிறார் என்றால் அந்தப்படத்தில் விசயம் இருக்கும், படம் கண்டிப்பாக ஹிட்டாகும். கடுக்கா என்றால் காய் இல்லை நம்ப வைத்து ஏமாற்றுவது தான் கடுக்கா. படத்தில் இரண்டு ஹீரோ, அதில் யாருக்கு ஹீரோயின் கடுக்கா கொடுக்கிறார் என்பது தான் படம். ஆனால் ஹீரோயின் உண்மையிலேயே கடுக்கா கொடுத்தது தயாரிப்பாளருக்குத் தான். இவர்கள் கொடுத்த வாய்ப்பில் ஹீரோயின் ஆகிவிட்டு எந்த விழாவிற்கும் வரவில்லை. இசையமைப்பாளர் ஒரு பாட்டில் அனைவரையும் கவர்ந்து விட்டார். விஜய் கௌரிஷ் அட்டகத்தி தினேஷை ஞாபகப்படுத்துகிறார். நன்றாக நடிக்கிறார். கடுக்கா ஆடியன்ஸை ஏமாற்றாது. சினிமாவில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. சினிமாவில் இருப்பவர்களே சினிமா நன்றாக இருக்க வேண்டுமென்று நினைப்பதில்லை, அவர்கள் படம் மட்டும் ஜெயிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். யாரும் சினிமாவை காப்பாற்ற நினைப்பதில்லை. கடுக்கா சின்ன டீம் செய்துள்ள நல்ல படம், படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.
*நடிகர்கள்* : விஜய் கௌரிஷ், ஸ்மேஹா, ஆதர்ஷ் மதிகாந்த், மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா மற்றும் பலர்
*தொழில் நுட்ப குழு* இயக்குநர் : SS முருகராசு இசையமைப்பாளர்: கெவின் டெகோஸ்டா ஒளிப்பதிவாளர்: சதீஸ் குமார் துரைக்கண்ணு எடிட்டர் : M.ஜான்சன் நோயல் தயாரிப்பு வடிவமைப்பாளர் : விஜய் அந்துவான் நடன அமைப்பாளர்: அபேப் R.K இணை இயக்குநர்: R.ஐய்யனார், ரமேஷ் பாஷா இணை இயக்குநர்: சரண் K.ஆறுமுகம் உதவி இயக்குநர்: ஆறுமுகம், பிரதாப் சிங் DI: கலர் வேவ்ஸ் கலரிஸ்ட் : ராகவன் VFX: Issls ஸ்டுடியோ உதவி ஒளிப்பதிவாளர் : ஆல்வின், கிஷோர் உதவியாசிரியர்: லோகேஷ்ராஜா, சாம்ராஜா விளம்பர வடிவமைப்பாளர் : கோலிவுட் ஸ்டுடியோஸ் விநியோகம் : G.தனஞ்செயன் மக்கள் தொடர்பு : கேப்டன் M P ஆனந்த்