நிவின் பாலி, நயன்தாரா ஜோடி மீண்டும் இணையும், ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’

நிவின் பாலி, நயன்தாரா நடிப்பில், விரைவில் வெளியாகவுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான வேகத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்று, சமூக வலைத்தளங்களில் இந்த முன்னோட்டக் காட்சி, இப்போது வைரலாகி வருகிறது. ரசிகர்களால் பெரிதும்  விரும்பப்படும் நிவின் பாலி – நயன்தாரா எனும் நட்சத்திர ஜோடி மீண்டும் இணையும் இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர்கள் ஜார்ஜ் பிலிப் ராய் மற்றும் சந்தீப் குமார் எழுதி இயக்கியுள்ளனர். மாவெரிக் மூவீஸ்  தயாரிப்பில், நிவின் பாலியின் ஹோம்  மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.  வெளியான முன்னோட்டத்தில் , பள்ளி வாழ்க்கையின் வண்ணமயமான வாழ்க்கையையும், பரபரப்பான உலகையும் சித்தரிக்கிறது. மேலும் மாணவர்களை மையமாகக் கொண்டு கதை நகரும் என்பதை டீசர் வெளிப்படுத்தியுள்ளது. நகைச்சுவை, வேடிக்கை, அதிரடி, திருப்பங்கள் ஆகிய அனைத்தையும் கலந்த வணிக பொழுதுபோக்கு படமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.*******

நிவின் பாலி தனது ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும்  துறுதுறுப்புடன் குறும்பு மிக்க  ஹரி என்ற கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார். அதேசமயம், நயன்தாரா ஒரு வலிமையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இது கதைக்கு பெரும் சுவாரஸ்யத்தை சேர்க்கும் அம்சமாக அமைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு வெளியாகிய ப்ளாக்பஸ்டர் “லவ் ஆக்சன் டிராமா” திரைப்படத்திற்குப் பின், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, நிவின் பாலி – நயன்தாரா ஜோடி மீண்டும் இணைந்துள்ள இந்தப்படம் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. படத்தில் ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் முருகதாஸ், சரத் ரவி, உதய் மகேஷ், வெட்டை முருகன், ஜெயகுமார் ஜனகிராமன், விஜய் சத்யா, மாத்யூ வர்கீஸ், ராஜா ராணி பாண்டியன், தீப்தி, கீரண் கொண்டா, காமருதீன் K உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். மேலும், மலையாளத் திரையுலகில் இருந்து அஜு வர்கீஸ் (Aju Varghese), ஷரஃபுதீன் (Sharafudheen), சுரேஷ் கிருஷ்ணா, மல்லிகா சுகுமாரன், லால், ஜகதீஷ், ஜானி ஆன்டனி ஆகியோர் இணைந்துள்ளதால், இந்த ஆண்டு வெளிவரும் மிக அதிக நட்சத்திரங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட படைப்புகளில் ஒன்றாக இப்படம் திகழ்கிறது.