கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் நடத்தும் `52வது ஆண்டு எழுச்சி மாநாடு மற்றும் செந்தமிழ் கலை மாலை – 2025

தற்போது கனடா வாழ் சிவா கணபதிப்பிள்ளை அவர்களைத் தலைவராகவும் ஜேர்மனி வாழ்  துரை கணேசலிங்கம் அவர்களை  செயலாளர் நாயகமாகவும் கொண்டு கனடாவைத் தலைமையகமாகவும் பிரதான செயற்பாட்டு தேசமாகசுவும்  இயங்கிவரும் `உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்` ஐரோப்பிய ஒன்றியம் நடத்தும்  `52வது ஆண்டு எழுச்சி மாநாடு மற்றும் செந்தமிழ் கலை மாலை – 2025 எதிர்வரும் 25-10-2025 அன்று  ஜேர்மனி தேசத்தின் `ரெயின்` நகரத்தில் ;நடைபெறவுள்ளது. மேற்படி மாநாடும்  செந்தமிழ் கலை மாலை நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற கனடாவிலிருந்தும் உலகின் பல நாடுகளிலிருந்தும் பல நீண்ட கால உறுப்பினர்களும் இயக்கத்தின் தூண்களாக விளங்குகின்றவர்களும் தங்கள் வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வைத்துள்ளார்கள். உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் காப்பாளராக விளங்கும் கனடா வாழ் பேராசிரியர் இ. பாலசுந்தரம்.    இயக்கத்தின் அகிலத் தலைவர் சிவா கணபதிப்பிள்ளை மற்றும் இயக்கத்தின் கனடா கிளைத் தலைவரும் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான லோகன் லோகேந்திரலிங்கம் ஆகியோர் தங்கள் வாழ்த்துச் செய்திகளை  விழா மலருக்காக அனுப்பி வைத்துள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.– தகவல்  சத்தியன்- கனடா-