கனடா ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ஶ்ரீ ஐயப்பன் ஆலய கலாச்சார மண்டபத்தில் 13-09-2025 அன்று சனிக்கிழமையன்று நடைபெற்ற `திருக்குறள்- சிந்தனை விளக்கம்`, `உள்ளத்தின் ஊற்றுக்கள்`- கவிதைத் தொகுதி, .`இலங்கையில் உள்ள ஆலயங்கள்` ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவில் மொன்றியால் மாநகர் வாழ் திருமதி யோகநாயதி நடராஜா என்னும் பெண் படைப்பாளியின் மேற்படி நூல்கள் வெளியிடப்பெற்றன. அந்த விழாவிற்கு அறிஞரும் ஆங்கில எழுத்துலகில் பிரகாசிப்பவருமான சாமி அப்பாத்துரை அவர்கள் தலைமை வகித்தார். அங்கு வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் இ. பாலசுந்தரன் மற்றும் சிறப்புரையாற்றிய உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் ஆகியோர் மேற்குறிபிட்ட தொனிப்பொருளில் தங்கள் உரைகளை ஆற்றி வெளியீட்டு விழாவின் சிறப்பைத் தக்கவைத்தார்கள் அன்று வெளியிடப்பெற்ற மூன்று நூல்கள் பற்றிய வெளியீட்டு உரைகள் மற்றும் சிறப்புரைகள் ஆகியவற்றை கவிஞர் அகணி சுரேஸ் அவர்கள். முனைவர் வாசுகி நகுலராஜா. விரிவுரையாளர் நாகேஸ்வரி மற்றும் தமிழாசிரியை கமலவதனா சுந்தா ஆகியோர் ஆர்வத்துடன் மேடையில் சமர்ப்பித்து விழா நாயகி திருமதி யோகநாயதி நடராஜா அவர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றனர். உறவினர்கள் நண்பர்கள். கலை இலக்கிய ஆர்வலர்கள் என பலரும் அங்கு கலந்து கொண்டு நூற் பிரதிகளைப் வாங்கிச் சென்றனர். மொன்றியால் வாழ் புகழ்பெற்ற அறிவிப்பாளர் உமா அவர்களின் வருகையும் அவரது பணியும் வெளியீட்டு விழாவிற்கு மகுடம் சூட்டின என்றால் அது மிகையாகாது
கனடாவில் பெண்; படைப்பாளிகள் எண்ணிக்கையில் பெருகி எமக்கு பெருமை சேர்க்க நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்” உதயன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கத்தின் ஆதங்கம்!
