“ஃப்ரைடே” படம் வருகிற நவம்பர் 28 ஆம் தேதி வெளியாகிறது.

“டக்டம் மோஷன் பிக்சர்ஸ்” தயாரிப்பில், இயக்குநர் ஹரி வெங்கடேஷ் இயக்கத்தில், தீனா, மைம் கோபி மற்றும் அனீஷ் மாசிலாமணி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் “ஃப்ரைடே” திரைப்படம்,  வருகிற நவம்பர் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. “நான் லீனியர்” பாணியில், ஒரே இரவில் நடக்கும் வெவ்வேறு பரபரப்பான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு, இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் குளச்சல் மற்றும் அதன் துறைமுகம், கடக்கரை பகுதிகளை சுற்றி படம்பிடிக்கப்பட்டுள்ளது. *******

இப்படம் திரையுலகில் கால் பதித்துள்ள “டக்டம் மோஷன் பிக்சர்ஸ்” தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். இப்படத்தின்  அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில்,  நவம்பர் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.  இப்படத்தை “ஷிவானி ஸ்டுடியோஸ்” தமிழகமெங்கும் வெளியிடுகிறது.