சில்வர் டச் இந்தியா புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் துப்பறிவாளரும் பிரபல நாவல் ஆசிரியருமான சிவகுமார் நாயர் தயாரித்து, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படத்திற்கு “தீர்ப்பு” என்று பெயர் வைத்துள்ளார். இந்த படத்திற்கு மோகன்ராம் இசையமைக்க, பாடல்களை அகஸ்டின் எழுதுகிறார். லோகநாதன் சீனிவாசன் ஒளிபதிவை மேற்கொள்ள, ரமேஷ் ரெட்டி நடனம் அமைக்கிறார். பல விருதுகளைப் பெற்ற பிரபல எடிட்டரும், எழுத்தாளருமான பீம்சிங் லெனின் அவர்களின் மேற்பார்வையில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.******
நடிகர்,நடிகைகள்,தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படம் பற்றி இயக்குனர் சிவகுமார் நாயர் கூறியதாவது.. இந்தப் படத்தை முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேஷன் கலந்த க்ரைம் திரில்லராக உருவாக்க இருக்கிறோம். இயக்குனர் சிவகுமார் நாயர் எழுத்தாளர் மற்றும் துப்பறியும் சேவை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த கிரைம் திரில்லர் படம் நிச்சயம் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சென்னை மற்றும் அட்டப்பாடி, ஊட்டி கொடைக்கானல் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் சிவகுமார் நாயர்.

