பாசன் ஸ்டுடியோ சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட் நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, ஜே.கே. சந்துரு இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில், நாயகியாக நடித்துள்ள “ரிவால்வர் ரீட்டா” திரைப்படம் நவம்பர் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் அறிவிப்பு நிகழ்வில் நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியதாவது: “ரிவால்வர் ரீட்டா. இயக்குநர் சந்துரு வெங்கட் பிரபு சார் கூட நிறைய வேலை பார்த்துள்ளார். அவர் முதல் நாள் கதை சொன்னபோதே பயங்கரமாகச் சிரித்து மகிழ்ந்தேன். அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. அவர் ரீட்டாவாக என்னைத் தேர்ந்தெடுத்தற்கு நன்றி. தி ரூட் நிறுவனத்தின் ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் பாசன் ஸ்டுடியோ சுதன் சுந்தரம் இருவருக்கும் நன்றி. அவர்கள் தான் இந்த புராஜக்டை டிசைன் செய்தார்கள். ஒளிப்பதிவாளர் தினேஷ் உடன் முன்பே வேலை பார்த்துள்ளேன், அவர் இப்படத்தை அழகாக ஷீட் செய்துள்ளார். ஷான் நல்ல இசை தந்துள்ளார், அவருடன் மீண்டும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. கலை இயக்குநர், எடிட்டர் எல்லோருக்கும் நன்றி. ராதிகா மேடமுடன் முதல்முறையாக நடிக்கிறேன், அவர் தயாரிப்பில் தான் நான் தமிழில் அறிமுகமானேன் , அவருடன் நடித்த காட்சிகளை எல்லோரும் ரசிப்பீர்கள். என் உடன் நடித்த மற்ற அனைவரும் மிக நன்றாக நடித்துள்ளனர். கதிர் சார், செண்ட்ராயன் சார், அகஸ்டின் சார் காட்சிகள் சூப்பராக இருக்கும். ரிவால்வர் ரீட்டா ஒரு டார்க் காமெடி படம், எல்லோரும் கண்டிப்பாக ரசிப்பீர்கள்” என்றார். ********
இயக்குநர் JK சந்துரு பேசியதாவது.., The Route ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் இருவருக்கும் நன்றி. ஒரு ஹீரோயின் சப்ஜெக்டை நம்பி, பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார்கள். கீர்த்தி மேடமுக்கு நன்றி. கதையில் கீர்த்தி மேடம் அளவுக்கு ராதிகா மேடம் மற்றும் பல கேரக்டருக்கு சமமான ரோல் இருந்தது, ஆனால் அவர் எனக்குக் கதை பிடித்துள்ளது எனச் சொன்னார் அவருக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் தினேஷ் திரையில் மேஜிக் செய்துள்ளார். ஷான் ரோல்டன் அவருடைய பெஸ்ட் தந்துள்ளார். திலீப் சுப்பராயன் மாஸ்டர் என் நீண்ட கால நண்பர் சூப்பராக செய்துள்ளார். எடிட்டர் பிரவீன் சார் அவர்களின் எடிட்டிங் இந்த படத்தில் பேசப்படும். செய்து தந்தார். கீர்த்தி மேடம் படத்திற்காக அவ்வளவு பெரும் ஒத்துழைப்பு தந்தார், அவருக்கு நன்றி. ராதிகா மேடம் அம்மாவாக நடித்துள்ளார். அவருடைய ரோல் சூப்பராக இருக்கும். சுனில் சார், அஜய் கோஷ் சார் நல்ல ரோல் செய்துள்ளார்கள். இப்படத்தில் நிறைய கேரக்டர்கள் எல்லோருமே நன்றாக நடித்துள்ளனர். இது ஒரு நல்ல ஃபேமிலி எண்டர்டெயினர். குடும்பத்தோடு ஜாலியாக பார்க்கலாம். அனைவருக்கும் நன்றி.

