சுராஜ் புரடெக்ஷன் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர் சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி. ஷெட்டி நடிப்பில், அர்ஜுன் ஜான்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “45”. கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படமான ‘45’ படத்தின் தமிழ்ப்பதிப்பு வரும் 2026 ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தினை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன் தமிழின் முன்னணி நடிகர் விஜய் ஆண்டனி கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். இவ்விழாவில் நடிகர் சிவராஜ்குமார் பேசியதாவது: நான் விஜய் ஆண்டனி ரசிகன். அவர் சினிமாவில் எல்லா வேலையும் செய்துள்ளார். அவரின் பிச்சைக்காரன் படத்தின் மறுபதிப்பு வாய்ப்பு எனக்கு வந்தது; ஆனால் அதை தவரவிட்டு விட்டேன். மீண்டும் அவரின் வேறு படத்தில் நடிக்கக் காத்திருக்கிறேன்.********
வின்செண்ட் சின்ன வயதிலிருந்து என் நண்பர்; அவர் என் சகோதரர் போலத்தான். ரமேஷ் ரெட்டிக்கு என் நன்றி. அறிமுக இயக்குநருக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு தந்துள்ளார். நான் தான் முதலில் கதை கேட்டேன்; என்னை நம்பி பெரிய செலவு செய்துள்ளார். அர்ஜுன் ஜான்யா இப்படத்தில் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளார். என்னிடம் கதை சொன்ன போது எல்லா கேரக்டர்களையும் நடித்தே காட்டிவிட்டார். இப்போது இயக்குநராகியுள்ளார்; விரைவில் நடிகராக ஆகிவிடுவார். உபேந்திராவிற்கு நான் வாய்ப்பு தரவில்லை; அவர் தான் எனக்கு பிரேக் தந்தார். அவர் அட்டகாசமான கலைஞன். ராஜ் B. ஷெட்டி சமீபமாக கலக்கி வருகிறார். அவர் நல்ல இயக்குநர், நல்ல எழுத்தாளர். எங்கள் மூன்று பேரின் கெமிஸ்ட்ரி படத்தில் அட்டகாசமாக வந்துள்ளது. இது ஒரு தனி உலகம்; படம் பார்க்கும் போது உங்களுக்குப் புரியும். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும்
தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி பேசியதாவது…படத்தின் டிரெய்லர் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன். சிவாண்ணா, ராஜ் B. ஷெட்டி சூப்பராக நடித்துள்ளனர், உபேந்திரா கலக்கியுள்ளார். அர்ஜுன் ஜான்யா இப்படத்தை அற்புதமாக உருவாக்கியுள்ளார். படத்தைப் பற்றி என்னைவிட அவர்கள் தான் சொல்ல வேண்டும். இங்கு படத்தை வாழ்த்த வந்துள்ள விஜய் ஆண்டனி அவர்களுக்கு நன்றி. படம் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
தொழில்நுட்பக் குழு கதை, இசை, இயக்கம் : அர்ஜுன் ஜான்யா தயாரிப்பு : ஸ்ரீமதி உமா ரமேஷ் ரெட்டி, M. ரமேஷ் ரெட்டி தயாரிப்பு நிறுவனம் : Suraj Production ஒளிப்பதிவு : சத்யா ஹெக்டே எடிட்டிங் : K. M. பிரகாஷ் சண்டை இயக்கம் : டாக்டர் K. ரவிவர்மா, ஜாலி பாஸ்டியன், டிஃப்ரென்ட் டேனி, சேதன் டி’சௌசா நடன இயக்கம் : சின்னி பிரகாஷ், B. தனஞ்சய் வசனங்கள் : அனில் குமார் தயாரிப்பு மேலாளர் : ரவிசங்கர் தயாரிப்பு பொறுப்பாளர் : சுரேஷ் சிவண்ணா கலை இயக்கம் : மோகன் பண்டித் மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)

