ஏ.சி.எம்.சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்திருக்கும் படம் “ரூம் பாய்” .சி.நிகில் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஹர்ஷா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு, கற்பகம் மற்றும் கவிதா விஜயன், சமீர், சிட்டி ராஜா, அருண்ராஜா, பிரபாகர், கேரளா பெஹமின் உட்பட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் மும்பை மாடல் அழகி நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.******
சி.பாரதி ராஜன் Dft இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடலாசிரியர் சூரியமூர்த்தி வரிகளுக்கு வேலன் சகாதேவன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை D.V. மீனாட்சி சுந்தர் செய்திருக்கிறார். நடனம் – தினா ஸ்டண்ட் – கார்த்திக் வர்மன் விளம்பர வடிவமைப்பு S.B.ராஜா உடைகள்- வளையாபதி மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ் தயாரிப்பு மேலாளர் – முத்துக்குமார் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்- A.சக்தி. தயாரிப்பு மேற்பார்வை – R.முரளி.

