ஜென்ம நட்சத்திரம் மூன்றுநாளில் மொத்த செலவும் வசூலானது – தமன் ஆகாஷ்

அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே. சுபாஷினி வழங்கிய ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தை பி. மணிவர்மன் இயக்கி இருந்தார். தமன் ஆகாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்தப் படம் கடந்த ஜூலை 18 அன்று திரையரங்குகளில் வெளியானது. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிட்ட இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது இது குறித்து நடிகர் தமன் ஆகாஷ் கூறுகையில், “என்னுடைய முந்திய படமான ‘ஒரு நொடி’ அதன் பட்ஜெட்டை எங்களுக்கு திரும்ப கொடுத்தது. ஆனால், ‘ஒரு நொடி’ படத்தின் மொத்த பட்ஜெட்டை ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் மூன்று நாள் வசூல் கொடுத்துள்ளது. இதற்கு ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் சாரின் ஆதரவு முக்கியமானது. படத்தை அருமையாக வியாபாரம் செய்த அமோகம் பிக்சர்ஸூக்கும் நன்றி. படம் வெளி ஆவதற்கு முன்பு படக்குழுவில் யாரும் சரியாக தூங்கவில்லை. ஆனால், படம் வெளியான  பின்பு வசூல் பார்த்த பின்புதான் நிம்மதியாக இருந்தது. தமிழ்நாட்டில் 150 திரையரங்குகளில்தான் முதலில் படம் திரையிட்டோம். மக்கள் கொடுத்த ஆதரவிற்கு பிறகு 200- 250 என்ற எண்ணிக்கையில் திரையரங்கு எண்ணிக்கை அதிகரித்தார்கள்.  ஒவ்வொரு படத்திலும் கற்றுக் கொள்ள விஷயங்கள் இருக்கும். ஆனால், இந்தப் படம் எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்தது.*******

இயக்குநர் மணிவர்மன், “நினைத்ததை விட இந்தப் படம் நன்றாக போய் கொண்டிருப்பதால் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்த நன்றி தெரிவிக்கும் விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார். மல்டிஃபிளக்ஸ் திரையரங்கை விட சிங்கிள் ஸ்கிரீனில் படம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. நேரில் ஆடியன்ஸ் ரியாக்‌ஷன் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாரம் போலவே அடுத்த வாரமும் படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். இந்த வாய்ப்பு கொடுத்த அமோகம் ஸ்டுடியோஸ் சுபாஷினி மேம் மற்றும் விஜயன் சாருக்கு நன்றி. நிச்சயம் அடுத்து சக்சஸ் மீட்டில் சந்திப்போம். படம் ஆரம்பித்ததில் இருந்தே ஆதரவு கொடுத்து வரும் கேபிள் சங்கர் மற்றும் ஈரோடு மகேஷூக்கு நன்றி”.