கணவனையும் மகனையும் டூயட் பாட வைத்து படம் தயாரித்த பெண் தயாரிப்பாளர்

நாட்டுப்பற்றுள்ள ஒரு கதையுடன் தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகி இருக்கும் கமாண்டோவின் ‘லவ் ஸ்டோரி’ படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டக் காணொளி நடந்தது. இப்படத்தின் கதையை எழுதி இயக்கியதுடன் நாயகனாகவும் நடித்துள்ளார் வீர அன்பரசு. நாயகியாக ஏஞ்சல் நடித்துள்ளார். இவர்களுடன் பப்லு என்கிற பிருத்விராஜ், இயக்குநர் பேரரசு, ஆகாஷ், ‘வாழை’ ஜானகி, உஷா, தங்கதுரைப்பாண்டியன் போன்றவர்களும் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தில் கணவன் ஒரு பக்கம், மகன் ஒரு பக்கம் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்பாவும் மகனும் போட்டி போட்டுக் கொண்டு லவ் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தைத் தயாரித்தது அம்மா. இந்த மாதிரி குடும்பம் யாருக்குக் கிடைக்கும்? அந்தளவுக்கு ரசித்துள்ளார்கள்.******

படத்திற்கு வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாவலர் வி .சிவராமன் மற்றும் கார்த்திக்ராஜா இசையமைத்துள்ளனர், சண்டைப் பயிற்சிகளை கோல்டன் என். கோபால் அமைத்துள்ளார். உடைகள்: நாதன்,கலை: பழனி,தயாரிப்பு அனுராதா அன்பரசு.