அனிஷ் மாசிலாமணி தயாரிப்பில் ஹரி வெங்கடேஷ் இயக்கத்தில் மைம் கோபி, கே.ஒய்.தீனா, அனிஷ் மாசிலாமணி,,ராமச்சந்திர துரைராஜ், கலையரசன், சித்ராசேனன், சித்து குமரேசன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ப்ரைடே”. மைம்கோபி ஒரு அரசியல்வாதியும் அதிகார பலம் கொண்ட ரவுடியும் ஆவார். தனக்கு எதிரான ஒருவரை கொலை செய்து சட்டமன்ற உறுப்பினராகவேண்டும் என்று திட்டம்போடுகிறார். தீனாவிற்கு தன் அம்மாவின் மரணத்திற்கு காரணமானவர்களை கொல்ல வேண்டும் என்பது இலக்கு. அனிஷ் மாசிலாமணிக்கு தன் தம்பியை கரை சேர்க்க வேண்டும் என்று ஆசை. அவரின் தம்பிக்கு அண்ணன் போல் ரவுடியாக ஆகவேண்டும் என்பது குறிக்கோள். இவர்களின் ஒட்டுமொத்த இலக்கும் ஒரே புள்ளிக்குள் வருவது தான் ப்ரைடே படத்தின் கதை. தனது திறமை மற்றும் அனுபவத்தால் தான் தோன்றும் எல்லாக் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார் மைம்கோபி. தீனாவிற்கு இது முக்கியமான படம். கதாபாத்திரத்தின் தன்மையை உள்வாங்கி நடித்துள்ளார். நாயகி சித்து குமரேசன் தேர்ந்த நடிப்பால் கவர்கிறார். ராமச்சந்திர துரைராஜ், கலையரசன், சித்ராசேனன் உள்பட எல்லோரும் கவனிக்க வைக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் ஜானி நாஷ் கன்னியாகுமரி நிலப்பரப்பை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். டுமே பெயரில் மட்டுமல்ல. தனது இசையிலுமே வித்தியாசம் காட்டியுள்ளார். கதையில் தோன்றும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றன். முதல்பாதியைவிட இடைவேளைக்குப்பிறகு கதையில் சூடுபிடிக்கிறது. ரவுடியின் பிள்ளை போலீஸ், போலீஸின் பிள்ளை ரவுடி என்பது உள்பட திரைக்கதை ரைட்டிங்கில் நிறைய ட்விஸ்ட் வைத்து எழுதியுள்ளார் இயக்குநர் ஹரி வெங்கடேஷ். கதைக்குத் தேவையான இசையை அளவோடு இசைத்திருக்கிறார் இசையமைப்பாளர் டுமே. ஜானி நாஷின் ஒளிப்பதிவு தரமாகவுள்ளது. சில இடங்களில் இலையில் பிச்சிப்போட்ட புரோட்டாவை போல படத்தொகுப்பாளர் காட்சிகளை துண்டுதுண்டுகளாக்கி குழப்பி வைத்திருந்தாலும் கதையின் கருப்பையில் ஒன்று சேர்த்திருக்கிறார். புதிய முயற்சியை கையில் எடுத்திருக்கும் இயக்குநர். ஹரி வெங்கடேஷை பாராட்டாமல் இருக்க முடியாது.
“ப்ரைடே” திரைப்பட விமர்சனம்
