ராம் அப்துல்லா ஆண்டனி படத்தில் காவலராக “சௌந்தரராஜா”

அன்னை வேளாங்கன்னி ஸ்டுடியோஸ் சார்பில், கிளமென்ட் சுரேஷ் தயாரிப்பில்,  த.ஜெயவேல் இயக்கத்தில், பாடசாலை மாணவர்களின் கதையைமையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் “ராம் அப்துல்லா ஆண்டனி”. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பதாகை, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மூன்று மாணவர்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் முதன்மைப் பாத்திரங்களில் ஒருவராக, காவல்துறையில் நேர்மையான காவலராக  சௌந்தரராஜா நடித்துள்ளார். படத்தின் மையமாக, மாணவர்களுக்கும் காவல்துறைக்குமான ஆடுபுலி ஆட்டமாக விரியும் கதையில், மிரட்டலான தோற்றத்தில்,  ஆர்வமிக்க காவலராக  கதையின் முதுகெலும்பாக அசத்தியுள்ளார். சௌந்தர்ராஜா.  அவரது கதாப்பாத்திரம் ரசிகர்களிடம் பெரிதும் பேசப்படும். மேலும் இப்படத்தில்,  வேலராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சாய் தீனா, கிச்சா ரவி, சாம்ஸ், வினோதினி வைத்தியநாதன், பிக் பாஸ் அர்ணவ் மற்றும் ராஜ் மோகன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் வனிதா விஜய்குமார் நடித்துள்ளார்.******

இப்படத்தில், மூன்று சிறுவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கியுள்ளார் டைரக்டர். மூன்று சிறுவர்களில் ஒருவராக, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராக கலக்கிய பிரபலமான நடிக்கிறார். இன்னொரு பள்ளி மாணவராக அஜய் அர்னால்ட் அறிமுகமாகிறார். இவர், சினிமா போஸ்டர் டிசைனர் கிப்சனின் மகனாவார். மூன்றாவது மாணவராக  அர்ஜூன் என்கிறவர் அறிமுகமாகிறார்.  Annai Vailankanni Studios நிறுவனத்தின்  சார்பில், முதல் படைப்பாக தயாரிப்பாளர் TS கிளமென்ட் சுரேஷ் இப்படத்தினை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.  இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள், தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. டீசர் டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில் நுட்ப குழு விபரம்: எழுத்து, இயக்கம் – த.ஜெயவேல் ஒளிப்பதிவு –  L.K.விஜய்  இசை – T.R.கிருஷ்ண சேத்தன்  எடிட்டர் – வினோத் சிவகுமார்  கலை –  சீனு / எஸ்.இரளி மும்பை  பாடல் வரிகள் – சினேகன், T.ஜெயவேல்  ஸ்டண்ட் – சுரேஷ்  நடன இயக்குனர் – தீனா, I.ராதிகா  தயாரிப்பு மேலாளர் – ஏகாம்பரம்  ஸ்டில்ஸ் – சந்துரு  மக்கள் தொடர்பு –  ஜான்சன்  டிசைனர் – கிப்சன் UGA  கேஷியர் –  திருவேணி  நிர்வாக தயாரிப்பாளர் –  R. பவானி  தயாரிப்பு –  T S. கிளமென்ட் சுரேஷ்.