“ஸ்வீட்டி நாட்டி கிரேசி” பிப்.13ல் திரைக்கு வருகிறது

அருண் விசுவல்ஸ் நிறுவனம் சார்பில் கோவை ரமேஷ் தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் தயாரித்திருக்கும்  படம் “ஸ்வீட்டி நாட்டி கிரேசி”. ராஜசேகர்.ஜி. இந்த படத்தை இயக்கியுள்ளார். த்ரிகுண்  இந்த படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, ராதா ஆகிய மூவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் ரவி மரியா, தம்பி ராமைய்யா, சத்யன், சாம்ஸ்,மதன்பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் இவர்களுடன் தெலுங்கு நடிகர் ஆலி, ரகு பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பெண் ஒளிப்பதிவாளர் சி. விஜய ஸ்ரீ இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.*******

தொழில்நுட்பக் கலைஞர்கள்: எடிட்டிங் – K. குமார் சினேகன், பாஸ்கர் S.தேவ் இருவரும் பாடல்கள் எழுதியுள்ளனர். கலை இயக்குனர் –  ஜெயகுமார் நடனம் – I.ராதிகா  தயாரிப்பு –  கோவை ரமேஷ் மூன்று வெவ்வேறு விதமான காதலை மையமாக வைத்து மூன்று  கோணங்களில் நடக்கும்  முழுக்க முழுக்க காமெடி கலாட்டாதான் இந்த படம். இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஏற்ற டிரெண்டிங்கான படமாக இருக்கும். படம் பார்க்க வரும் அனைவரும் துவக்கம் முதல் இறுதிவரை சிரித்து மகிழ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அப்படியான காமெடி சரவெடியான திரைக்கதை இது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்தினோம். சென்னை,ஹைதராபாத்,கோவை, கோத்தகிரி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. படம் பிப்ரவரி 13 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில்  வெளியிடுகிறோம்  என்றார் இயக்குனர் ராஜசேகர்.G