அழகு பாண்டியன் தயாரிப்பில் சுபராக் முபாரக் இயக்கத்தில் ஹரிஷ் அலக், விஷ்ணு, வி.ஜெ.பப்பு, பினி குமார், ஜீவா ரவி, பிரவீணா, முருகாணந்தம், பிரதீப், மதன் எஸ்.ராஜா, சரடா நந்தகோபால் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும. படம் “நருவீ”. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள மலைக் கிராமத்திற்கு செல்கின்ற புதிய நபர்கள் மர்மமான முறையில் இறந்து விடுகிறார்கள். இந்நிலையில் அந்த வனப்பகுதிதில் சென்னையிலுள்ள ஒரு நிறுவனத்துக்கு சொந்தமான தேயிலைத் தோட்டத்தை விரிவு படுத்துவதற்காகவும் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காகவும் 5 நபர்கள் குன்னூர் செல்கிறார்கள். குன்னூரிலிருக்கும் மலைவாழ் மக்கள் அந்த வனப்பகுதிக்கு புதியதாக செல்பவர்கள் யாரும் உயிருடன் திரும்பியது இல்லை என்று எச்சரிக்கை செய்வதையும் மீறி அந்த காட்டுப்பகுதியி வாழந்ஹ ஒரி நாகரீகமான ஒரு இளம் பொண்ணும் இரண்டு வயதான பெண்களும் வழிகாட்டியாக் இவர்களுடன் செல்கிறார்கள். அந்த ஒத்தையடி பாதையான வனப்பகுதியின் ஒரு இடத்திற்கு சென்றதும் அந்த இளம் பெண் கட்டுக்கடங்காமல் கைகள் உதர ஓடுகிறாள். அப்பெண்ணை பின் தொடர்ந்து இவர்கள் அனைவரும் ஓடுகிறார்கள். ஒரு செடி புதருக்குள் சாய்ந்து கிடக்க்ம் மோட்டார் சைக்கிளைப் பார்த்து அந்த இளம் பெண் “இதுதான் 15 வருடத்துக்குமுன் காணாமல் போன என் மாமா வண்டி” என்று கதறி அழுகிறாள். அந்த பெண்ணின் மாமா என்ன ஆனார்?. எனப்தைத்தான் பல அதிரடி திருப்பங்களுடனும் அதிச்சியூட்டும் காட்சிகளுடனும் சொல்லுவதுதான் இப்படத்தின் கதை. அப்பெண்ண்ஜ்ன் மாமாவாக நடித்திருக்கும் ஹரிஷ் அலக் உண்மைய்லேயே மருத்துவர் ஆவார். ஒரு மருத்துவரின் மனநிலை எப்படியிருக்க வேண்டும் என்பதை தனஹு நடிப்பின் மூலம் மற்ற மருத்துவர்களுக்கு தெளிவுபடுத்தியிருக்கிறர். அமைதியான முகமும் அழுத்தமான கொள்கை பிடிப்பும் திரையில் காட்டியிருக்கும் ஹரிஷ் அலக் பாராட்டுத்கலுக்குரியவர். திறமையாக தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதில் நடித்த விஷ்ணு, வி.ஜெ.பப்பு, பினி குமார், ஜீவா ரவி, பிரவீணா, முருகாணந்தம், பிரதீப், மதன் எஸ்.ராஜா, சரடா நந்தகோபால. ஆகிய அனைவரும் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து திறம்பட நடித்துள்ளார்கள். இசையும் ஒளிப்பத்கிவும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. படத்தொகுப்பை இன்னும் சற்று கவனத்துடன் செய்திருந்தால் ஒரு முழுநீள நாவலாக படம் அமைந்திருக்கும். சேவைகளில் மிக சிறந்த சேவை ஏழை எளிய மக்களுக்கு அளிக்கப்படும் கல்விதான் சிறந்த சேவை என்பதை சொல்லியிருக்கும் இயக்குநர் சுபராக் முபாரகை பாராட்டத்தான் வேண்டும்.
“நருவீ” திரைப்பட விமர்சனம்
