பாவனாவின் ‘அனோமி: ‘தி ஈக்வேஷன் ஆஃப் டெத்’

இந்திய திரையுலகில் 23 ஆண்டுகளாக தனது  நடிப்பு திறமையாலும், விடாமுயற்சியாலும் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் பாவனா. பல்வேறு திரைப்படங்கள், பிரபல நடிகர்களுடன் பணியாற்றி இருக்கும் பாவனா தனது 90வது மைல்கல் திரைப்படமான ‘அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்’ மூலம் மீண்டும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்த உள்ளார். ’நம்மல்’ திரைப்படம் மூலம் அறிமுகமான பாவனா, இதுவரை பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வரிசையில், `அனோமி’ படத்தில் அவர் தனது திரையுலக வாழ்க்கையின் மிகக் கடினமும், ஆழமும் கொண்ட பாத்திரங்களில் ஒன்றை ஏற்று நடித்துள்ளார்.*******

படக்குழு விவரம்: – இசை: ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் (அனிமல், அர்ஜூன் ரெட்டி) – ஒளிப்பதிவு: சுஜித் சரங் – படத்தொகுப்பு: கிரண் தாஸ் – சண்டைப்பயிற்சி: ஆக்‌ஷன் சந்தோஷ் – ஆடை வடிவமைப்பு: சமீரா சனீஷ் – விளம்பர வடிவமைப்பு: எல்லோடூத் (Yellowtooth) – விஷுவல் புரமோஷன்: ஸ்னேக் பிளான்ட் எல்எல்பி (Snake Plant LLP)  – மக்கள் தொடர்பு: ஶ்ரீ வெங்கடேஷ்