சினிமா டூர் எண்டடெய்மெண்ட் மற்றும் பி. ஸ்கொயர் எண்டர்டெய்மெண்ட் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை நடிகர் செந்தில் துவக்கிவைத்தார். இத்திரைப்படம் இரண்டு கதாநாயகர்களை மையமாக வைத்து உருவாகிறது. இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் மற்றும் ‘அப்புச்சி கிராமம்’ படத்தில் நடித்த பிரவீன் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுக்கு ஜோடியாக இரு நாயகிகள் நடிக்கின்றனர். அதில் ஒருவர் படத்தின் தயாரிப்பளாரான சூர்யாதேவியும் நடிக்கவுள்ளார். இன்னொருவர் விரைவில் தேர்வு செய்யபடவுள்ளார். மேலும் ஜெயபிரகாஷ் , வினோதினி, விஜய் டிவி புகழ் தீபா, சாய் தீனா, கல்லூரி வினோத், ஆதித்யா டீவி கதிர், மதன், நான் மகான் அல்ல படத்தில் நடித்த மகேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.********
தொழில்நுட்ப கலைஞர்கள் : ஒளிப்பதிவாளர் ஸ்ரீவேனுவாசன் இசையமைப்பாளர் : சாம்சன் படத்தொகுப்பு : பிரேம் குமார் ஸ்டண்ட் : டிராகன் சிங் லீ ஆர்ட் : விக்கி மேனேஜர் : RK எக்ஸ்கியூட்டிவ் ப்ரொடியூசர் : சாய் சரவணாஜி மக்கள் தொடர்பு : இரா.குமரேசன்
இத்திரைப்படம் ஒரு ஜாலியான பொழுதுபோக்கு மற்றும் கிரைம் திரில்லராக உருவாக இருக்கிறது. இப்படம் தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

