காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவர்களின் மெட்ரோ இரயில் மகிழ்ச்சி பயணத்தை மேற்கு மண்டல இணை ஆணையாளர் மற்றும் கீழ்ப்பாக்கம் துணை ஆணையாளர் துவக்கி வைத்தார்கள்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள்உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்கள் புதுப்பிக்கப்பட்டும்,(GCP-Police Boys and Girls Club) புதுப்பொலிவுடன் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற சிறுவர்கள் மெட்ரோ இரயிலில்மகிழ்ச்சி பயணம் (Joy Ride) செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.  

சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களின் மேற்பார்வை அதிகாரி (Nodal Officer) திருமதி.S.ராஜேஸ்வரி, இ.கா.ப., இணை ஆணையாளர் (மேற்கு மண்டலம்) அவர்கள இன்று (08.05.2022)  காலை சென்னை ஷெனாய் நகர் மெட்ரோ இரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காவல் சிறார் ற்றும் சிறுமியர் மன்ற சிறுவர்களின்  ஷெனாய் நகர் முதல்  விமான நிலையம்வரையிலான மெட்ரோ ரயில் மகிழ்ச்சி பயணத்தை துவக்கி வைத்து சிறுவர்களுடன் சேர்ந்து மெட்ரோஇரயிலில் பயணித்தார். இந்நிகழ்ச்சியில் அண்ணா நகர் துணை ஆணையார் திருR.சிவபிரசாத், இ.கா.பமற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் சிறுவர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேற்கு மண்டலத்தைச்சேர்ந்த 50 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்  ாணவர்கள் மெட்ரோ இரயிலில் குதுகலமாகபயணித்தனர். 

இதே போன்று கீழ்ப்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையாளர்           திரு.K.கார்த்திக்கேயன், இ.கா.ப அவர்கள் இன்று (08.05.2022) சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில்கலந்து கொண்டு வடக்கு மண்டல காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற சிறுவர்களின் சென்ட்ரல் முதல்விமான நிலையம் வரையிலான மெட்ரோ இரயில மகிழ்ச்சி பயணத்தை துவக்கி வைத்தார். வடக்குமண்டலத்தைச் சேர்ந்த 50 காவல் சிறார் மற்றும் சிறுமியர  மன்ற மாணவர்கள் மெட்ரோ இரயிலில்குதுகலமாக பயணித்தனர்.