இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாகஏமாற்றி ரூ.2 கோடிக்கு மேல் மோசடி – போர்ச்சுகல் நாட்டில் தலைமறைவாக இருந்த நபர் சென்னையில் கைது.

செங்கல்பட்டு மாவட்டத்தைச்சேர்ந்த பத்மநாபன், வ/23, என்பவரிடம் கடந்த 2023ம் வருடம் சென்னையை சேர்ந்த சைபுதின் வயது 51, என்பவர் போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக பணம் ரூ.1.25,000/-பெற்றுக்கொண்டு போலந்து நாட்டிற்கு வேலைக்கான விசா வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றியதாக பத்மநாபன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இவ்வழக்கின் புலன் விசாரணையில் சைபுதின் கடந்த 2023ம் ஆண்டு செயல்பாட்டில் இல்லாத என்ற கன்சல்டன்சி பெயரில் மத்திய அரசின் உரிமம் பெறாமல் போர்ச்சுகல், இத்தாலி, கேமேன் தீவு,போலந்து மற்றும் ஜெர்மன் ஆகிய நாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 193 நபர்களிடம் பணம் ரூ.2 கோடிக்கு மேல் வங்கி கணக்கு மூலமாகவும் நேரடியாகவும் பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்ததால் 1வது எதிரியை கடந்த 30.01.2025-ம் தேதி கைது செய்து விசாரணை செய்ததில் இந்த குற்ற சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது. எதிரி மாகம் வினய் வர்தன் என்பது தெரியவந்தது. இவ்வழக்கில் எதிரி மாகம் வினய் வர்தனை தேடி வந்த நிலையில் அவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. 31.07.2025ம் தேதி போர்ச்சுகல் நாட்டில் தலைமறைவாக இருந்து வந்த எதிரி மாகம் வினய் வர்தன், என்பவரை சொந்த ஊரான நெல்லூருக்கு வரும்போது சென்னை விமானநிலயத்தில் வைத்து விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தி ஆஜர் செய்யப்பட்டவரை, மத்திய குற்றப்பிரிவு, வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் கைது செய்யப்பட்ட மாகம் வினய் வர்தன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண்,வெளிநாட்டு வேலைக்காக மத்திய அரசின் கீழ் இயங்கும் அலுவலகத்தில் முகவராக செயல்பட உரிமம் பெறாமல் இயங்கி வரும் ஏஜெண்ட்டுகளை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும், போலியான நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டிற்கு செல்ல முயற்சிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் வெளிநாட்டு வேலைக்காக மத்திய அரசின் சான்றிதழ் இன்றி முகவராக செயல்பட்டாலோ மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தாலோ அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.